கையில் மோகனின் புகைப்படத்துடன் மோகனுக்காக பட வாய்ப்புகளை தேடிய காமெடி நடிகர்.. கைமாறாக மோகன் செய்த செயல்..

0
15524
mohan
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் மோகன். இவரை வெள்ளி விழா நாயகன், மைக் மோகன் என்று தான் அழைப்பார்கள். இவரை புகழ்பெற்ற கோலிவுட் நடிகர் என்று கூட கூறுவார்கள்.கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவரை இந்த அளவிற்கு புகழின் உச்சத்திற்கு காரணம் தமிழ் திரைப்படங்கள் தான்.இதுவரை தமிழில் 90க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் முதன்முதலில் சினிமா உலகத்திற்கு கன்னட மொழியில் கமலஹாசன் அவர்கள் நடித்த ‘கோகிலா’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இதனால், இவரை ”கோகிலா மோகன் என்று தான் அழைப்பார்கள். இது மட்டும் இல்லைங்க தமிழ் சினிமா துறையில் இந்த அளவிற்கு முன்னேறி இருப்பதற்கு காரணம் மனோபாலா, ஸ்டில்ஸ் ரவி தான் என்று அடிக்கடி சொல்லுவார்.

-விளம்பரம்-
Image result for actor mohan movies

நடிகர் மோகன் தன்னுடைய நடிப்பின் ஆரம்ப காலத்தில் ஒவ்வொரு பட கம்பெனிக்காக பட வாய்ப்பு தேடி அலைந்தார். மோகன் திரையுலகிற்கு வந்து 42 வருடங்கள் முடிந்து 43 வது வருடம் தொடங்கிவிட்டது. இவர் தமிழில் மகேந்திரன் இயக்கிய ‘நெஞ்சை கில்லாதே’ படத்தின் மூலம்தான் அறிமுகமானார். இதனை தொடர்ந்து, கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, விதி, மனைவி சொல்லே மந்திரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.இதன் பிறகுதான் அவருடைய வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழ்ந்தன. மேலும், சினிமா துறையில் ஒரு பெரிய ஹீரோவாகவும் ஆனார் மோகன். ஆனால்,மோகன் இந்த அளவு வருவதற்கு முன்னால் மோகனை ஒருகையில் பிடித்துக்கொண்டும் இன்னொரு கையில் அவருடைய புகைப்படங்களை எடுத்துக் கொண்டும் படக்கம்பெனி கம்பெனியாக அலைந்தார் மனோபாலாவும், ஸ்டில் ரவியும்.

- Advertisement -

பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக படத்தில் நடிக்க வாய்ப்புகள் வரத் தொடங்கின. அதற்கு பின்னர் மோகன் நடித்த படங்கள் வரிசையாக வெற்றி படங்களாக வந்தன. அந்த சமயத்தில் மோகனை தேடி வரும் தயாரிப்பாளர்களிடம் மோகன் ஒரு நிபந்தனை விதித்தாராம். உங்கள் படத்தில் மனோபாலாவை டைரக்டராக போட்டால் நான் தொடர்ந்து நடிக்கிறேன் என்று கூறுவாராம். இப்படி ஒரு கண்டிஷன் உடன் தான் படங்களில் ஒப்பந்தம் செய்தாராம். இதனை மனோபாலா ஆனந்தக் கண்ணீருடன் பேட்டியில் கூறினார். அதன் பின்னர்தான் மனோபாலா திரையுலகில் இயக்குனர் ஆனார். மேலும், அவருடைய பிள்ளை நிலா என்ற படத்தை இயக்கியும்,மோகன் நடித்தும் உள்ளார்.

Image result for mano bala

மேலும், இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. மனோபாலா மட்டும் இல்லைங்க ஸ்டீல் ரவியை கூட அப்படித்தான் ஆளாக்கினார். அவரை முதலில் போட்டோகிராபி ஆக பணியாற்ற சொன்னார். பின்னர் பட வாய்ப்புகள் வந்த உடன் மோகன் படத்திலேயே போட்டோகிராஃப்பராக பணியாற்றினார். மேலும், இவர்கள் மூவரும் சேர்ந்து ஒரு படம் எடுத்தார்கள். இந்த படத்தை ஸ்டீல் ரவி தயாரிக்க, மனோபாலா இயக்க, மோகன் நடித்து வெளிவந்த படம் தான் “நான் உங்கள் ரசிகன்”. மோகன் எப்போதுமே எல்லாரிடமும் நெருக்கமாக பழக கூடிய அன்பானவர். தயாரிப்பாளர் ,இயக்குநர், சக நடிகர்கள் என அனைவருக்கும் பிடிக்க கூடிய ஒரு உன்னதமான மனிதர். மேலும், இன்று வரை கூட ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார் மோகன்.

-விளம்பரம்-
Advertisement