40 ஆண்டுகளுக்கு முன்னர் மனோபாலா எழுதி இருக்கும் கடிதம் தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடி நடிகர்கள் வந்து சென்றாலும் ஒரு சில நடிகர்கள் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்து விடுகின்றார்கள் அந்தவகையில் நடிகர் மனோபாலா ஒருவர். ஆரம்ப காலத்தில் பாரதிராஜாவிற்கு துணை இயக்குனராக பணியாற்றினார் நடிகர் மனோபாலா. மேலும், இவரை சிபாரிசு செய்தது வேறு யாரும் இல்லை நம் உலகநாயகன் கமலஹாசன் தான்.

பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1979ஆம் ஆண்டு வெளியான புதிய வார்ப்புகள் படத்தில் துணை இயக்குனராக பணியாற்றினார் நடிகர் மனோபாலா.அதன் பின்னர் பல்வேறு படங்களை இயக்கினார் மணவாளா இறுதியாக ஜெயராம் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான நைனா படத்தை இயக்கியிருந்தார். மேலும், சதுரங்க வேட்டை, பாம்பு சட்டை ,சதுரங்க வேட்டை 2 போன்ற பல்வேறு படங்களை தயாரித்திருக்கிறார் மனோபாலா.

Advertisement

கடந்த ஜனவரி மாதம் தான் உடல்நலக் குறைவின் காரணமாக சென்னையில் உள்ள ஆப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அவருக்கு அஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டாகவும் பின்னர் அவர் உடல் தேறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. பின்னர் அவர் உடல்நலன் தேறி மீண்டு வந்தார். இப்படி ஒரு நிலையில் அறுவை சிகிச்சை முடிந்த சில மாதங்களில் மனோ பாலா காலமாகி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அவருக்கு வயது 69. கல்லீரல் பிரச்னை காரணமாக வீட்டில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் காலாமானார். விஜய், சத்யராஜ், பாரதிராஜா என்று பல்வேறு முக்கிய பிரபலங்கள் மனோபாலாவின் இறப்பிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் மனோபாலா எழுதிய கடிதம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. மனோபாலா, சித்ரா லட்சுமணன், மணிவண்ணன் போன்றோர் பாரதிராஜா திரைப்பட பல்கலைக்கழகத்தில் மாணவர்களாக இருந்திருக்கிறார்கள்.

Advertisement

அப்போது மனோபாலா சித்ரா லட்சுமணனுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். 40 வருடங்களுக்கு முன்னர் மனோபாலா எழுதி இருக்கும் அந்த கடிதத்தில் ‘டியர் சித்ரா, என்னமோ சட்டென்று ஒரு எண்ணம் ஏதோ எழுத வேண்டும் என்று நினைவுக்கு வந்தது நீங்கள்தான். தப்பா இது? ஒரு மன அரிப்பு, எங்கே எப்போது என்று அலைந்து கொண்டிருக்கிற மனதை சாந்தப்படுத்திக் கொள்ள ஒரு முயற்சி. நாம் அதிகம் பேசிக் கொண்டதில்லை.. பார்டர் தாண்டி நீங்களும் வந்ததில்லை, நானும் வந்ததில்லை. ஏன் தெரியாது.இப்போது இது ஒரு முயற்சி சித்ரா, நான் தொழிலை எவ்வளவு நேசிக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும்.

Advertisement

எதையாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்து வந்தவன் நான். ஆனால் இது என்ன சித்ரா எல்லாம் இடறல் மயம், ஏன் இப்படி ஆனது? எல்லா இடங்களிலும் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கவிழ்த்து விட்டு வேடிக்கை பார்க்கும் மனிதர்கள். நான் வரணும் சித்ரா கண்டிப்பா வரணும், என்னை பார்த்து சிரிப்பவர்களை பார்த்து நான் சிரிக்கும் காலம் வரும் சித்ராஇது ஒரு அக்கினி நெருப்பு அணைக்கவும் விடாமல் எரிந்து போகவும் விடாமல் மரண அவஸ்தை. எல்லாத்தையும் கண்ணில் காட்டி விட்டு இது உனக்கு கிடையாது என்ற சொல்வது போல இருக்கிறது என பல வருத்தங்களுடன் கடிதம் எழுதியுள்ளார் மனோபாலா.

Advertisement