போட்டிக்கு வரும் பிற சமுதாய படங்கள் – மாரி செல்வராஜின் ஓப்பனான பதில்.

0
542
mariselvaraj
- Advertisement -

பிற சமூகத்தினர் படங்கள் குறித்த கேள்விக்கு இயக்குனர் மாரி செல்வராஜ் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். ஆரம்பத்தில் இவர் ஒரு நடிகராக வேண்டும் என்ற கனவுடன் தான் சினிமாவுக்குள் வந்தார். ஆனால், இவர் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

-விளம்பரம்-

பின் 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாரி செல்வராஜ் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றதோடு பல்வேறு விருதுகளையும் பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘கர்ணன்’. இந்த படத்தில் ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி என்று பலர் நடித்து இருந்தார்கள்.

- Advertisement -

மாமன்னன் படம்:

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து இருந்தார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட் அடித்தது. தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். இத்திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினிற்கு கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இவர்களுடன் இந்த பட்டத்தில் வைகை புயல் வடிவேலு , பகத் பாசில் போன்ற முன்னணி நடிகர்களும் நடித்து வருகிறார்கள்.

மாரி செல்வராஜ் அளித்த பேட்டி:

மேலும், இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. தற்போது மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் பிரொடெக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்கள் கலந்து கொண்டிருந்தார். அதில் அவர், மாமன்னன் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் சென்று கொண்டிருக்கின்றது. மாமன்னன் படம் என்னுடைய கேரியரிலேயே ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

-விளம்பரம்-

பிற சமூகத்தினர் படம் குறித்து சொன்னது:

நான் நினைத்ததை விட பெரிய நடிகர்கள் கிடைத்திருக்கிறார்கள். வடிவேலு, உதயநிதி, கீர்த்தி சுரேஷ் போன்ற பல நடிகர்கள் இந்த படத்தில் நடிப்பதால் இந்த படத்தின் கதை பிரம்மாண்டமாக இருக்கிறது. என்னுடைய வேலையும் பிரம்மாண்டமாக தெரியும் என்று கூறி இருந்தார். உடனே அங்கிருந்தவர்கள் தலித் சமூகத்தை மையப்படுத்தி படங்கள் வருவது போல பிற சமூகத்தினரை வைத்தும் படம் எடுப்பது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த மாரி செல்வராஜ், தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படம்:

ஒரு கதை என்பது அவனுடைய ஆழ் மனது மற்றும் சிந்தனை. அவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை எழுதுவார்கள். அவ்வளவு தான். எனக்கு தோன்றுவதை நான் செய்கிறேன். என்னுடைய சிந்தனை, என்னுடைய வலியை நான் வெளிப்படுத்துகிறேன். அதுதான் கலை என்று கூறி இருக்கிறார். மேலும், உதயநிதி நடிக்கும் மாமன்னன் திரைப்படத்தை முடித்துவிட்டு மாரி செல்வராஜ் எடுக்கும் அடுத்தப்படத்தில் நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரம் நடிக்க இருக்கிறார். அந்த படத்தின் படப்பிடிப்பானது அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.

Advertisement