மாமன்னன் படத்தில் வடிவேலு கதாபாத்திரம் இதான் (இப்படி செஞ்சி தான படாதாபாடு பாட்டாரு )

0
352
Maamannan
- Advertisement -

மாமன்னன் படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக காமெடியில் கிங்காக திகழ்பவர் வைகைப்புயல் வடிவேலு. இவர் நகைச்சுவை நடிகராக மட்டும் இல்லாமல் பல்வேறு படங்களில் ஹீரோவாகவும் நடித்து உள்ளார். அது மட்டுமில்லாமல் இவர் பின்னணி பாடகரும் ஆவார். 1988ஆம் ஆண்டு டி ராஜேந்தர் இயக்கிய என் தங்கை கல்யாணி என்ற திரைப்படத்தின் மூலம் தான் வடிவேலு தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதனைத் தொடர்ந்து இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த 23ம் புலிகேசி படத்தின் வெற்றியை தொடர்ந்து 24ம் புலிகேசி படத்தை எடுக்க துவங்கினார். இந்த படத்தின் போது வடிவேலுக்கும், இயக்குனர் ஷங்கருக்கும் இடையேயான பிரச்சனை காரணமாக தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவை படங்களில் நடிக்கக் கூடாது என உத்தரவு விதித்தது.

- Advertisement -

‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படம்:

இதனால் பல வருடங்கள் வடிவேலு படங்களில் நடிக்காமல் இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இந்த பிரச்சனை தீர்ந்தது. தற்போது இவர் Lyca நிறுவனத்துடன் சேர்ந்து தற்போது கமிட் ஆகி இருக்கிறார். அதில் முதல் படமாக சுராஜ் இயக்கத்தில் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற படத்தில் வடிவேலு நடித்து வருகிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. தற்போது இந்த படத்தின் வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டு இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து வடிவேல் அவர்கள் பல படங்களில் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.

மாரி செல்வராஜ் இயக்கிய படங்கள்:

தற்போது வடிவேலு அவர்கள் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக மாரி செல்வராஜ் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். கடைசியாக இவர் இயக்கிய மாரி படம் ‘கர்ணன்’. இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இதனை தொடர்ந்து இவர் மாமன்னன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

-விளம்பரம்-

மாமன்னன் படம் பற்றிய தகவல்:

இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் என பல முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள். மேலும், இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகின்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த படத்திலிருந்து வடிவேலுவின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் வடிவேலுவின் பெயரே மாமன்னன் தான். இது முழுக்க முழுக்க அரசியல் திரைப்படமாகவும், வடிவேலு அரசியல்வாதியாகவும் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. தற்போது இது குறித்த போஸ்டர் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

வடிவேலுவின் அரசியல்:

இதை ரசிகர்கள் வைரலாகி வருகின்றார்கள். ரசிகர்கள் வடிவேலுவை மீண்டும் திரையில் பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். நடிகர் வடிவேலு கடந்த பல ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற தேர்தலின் போது தி மு கவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது விஜயகாந்தை மிகவும் தர குறைவாக பேசி இருந்தார். ஆனால், அந்த தேர்தலில் தி மு க வெற்றி பெறவில்லை. அதில் இருந்து தான் வடிவேலுவிற்கு சினிமா வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது படத்திலும் அரசியல் கலந்த கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்து இருப்பதை பார்க்கும் போது மறுபடியும் முதல்ல இருந்தா என்ற வடிவேலுவின் வசனம் தான் மைண்ட் வாய்சில் கேட்கிறது.

Advertisement