தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஷால். தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மார்க் ஆண்டனி. இந்த படத்தை வினோத் குமார் தயாரித்திருக்கிறார் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் செல்வராகவன், எஸ் ஜே சூர்யா, அபிநயா, ரிது வர்மா, செல்வராகவன், நிழல்கள் ரவி, Y.G. மகேந்திரன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசை அமைத்து இருக்கிறார். மேலும், பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் செல்வராகவன் டைம் டிராவல் செய்யும் கருவியை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். பல வருடங்களாக இதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். பின் 1975 இல் போன் மூலம் டைம் ட்ராவல் செய்யும் கருவியை செல்வராகவன் கண்டுபிடிக்கிறார். பின் இந்த டைம் ட்ராவல் கருவியை பயன்படுத்தி தன்னுடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் எல்லாத்தையும் செல்வராகவன் மாற்றுகிறார். அப்படி அவர் செய்யும் போது தான் அவர் இறந்து விடுகிறார்.

Advertisement

படத்தின் கதை:

பின் 20 ஆண்டுகளுக்கு பிறகு 1995இல் டைம் டிராவல் போன் விஷால் உடைய மகனுக்கு கிடைக்கிறது. இதை வைத்து அவர் தன்னுடைய தந்தை ஆன்டனியால் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கசப்பான விஷயங்களை மாற்ற நினைக்கிறார். அதன் பின் என்ன நடந்தது? இதில் எஸ் ஜே சூர்யா வின் பங்கு என்ன? விஷால் நினைத்ததை வெற்றி பெற்றாரா? என்பதே படத்தின் மீதி கதை. இந்த படத்தில் விஷால் அப்பா மற்றும் மகன் ஆகிய இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

நடிகர்கள் குறித்த விவரம்:

வழக்கம்போல் சிறப்பாகவே விஷால் தன்னுடைய நடிப்பை கொடுத்திருக்கிறார். இவரை எடுத்து வில்லனாக எஸ் ஜே சூர்யா வருகிறார். இவர் வழக்கம்போல் இல்லாமல் இந்த படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை ரசிகர்கள் ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார் என்று சொல்லலாம். பல படங்களில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடித்தாலும் இந்த படத்தில் தன்னுடைய வில்லத்தனத்தில் நகைச்சுவையை கலந்து பட்டையை கிளப்பி இருக்கிறார்.

Advertisement

இவர்களை அடுத்து படத்தில் வரும் அபிநயா, ரிது வர்மா, செல்வராகவன், நிழல்கள் ரவி என பலருமே தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். மேலும், படத்தை நகைச்சுவை கலந்த சுவாரசியத்தை இயக்குனர் காண்பித்திருப்பது பாராட்டுக்குறிய ஒன்று. ஆனால், இதற்கு முன் இவருடைய படங்கள் எல்லாம் தோல்வியை தான் சந்தித்தது. அதனால் இந்த படம் அவருக்கு கை கொடுக்கும் என்று சொல்லலாம். முதல் பாதி ஆரம்பத்தில் படம் பொறுமையாக சென்றாலும் அதற்குப்பின் ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக இருக்கிறது.

Advertisement

படம் குறித்த தகவல்:

குறிப்பாக இடைவெளிக்கு பின் இரண்டாம் பாதியில் வரும் காட்சிகள் எல்லாம் வேற லெவல் பட்டையை கிளப்புகிறது. சில்க் ஸ்மிதாவின் காட்சி இந்த படத்தில் இடம் பெற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மகன் sj சூர்யா விற்கும் தந்தை எஸ் ஜே சூர்யா விற்கும் இடையிலான காட்சி மாஸ் காட்டி இருக்கிறது. அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற விறுவிறுப்பையும் சுவாரசியத்தையும் இயக்குனர் கொடுத்து இருக்கிறார். ஆனால், படத்தில் நிறைய லாஜிக் மிறல்கள் இருக்கிறது.

இருந்தாலும், நம்மை சிரிக்க வைத்து இருக்கிறார் இயக்குனர். ஒளிப்பதிவில் எந்த குறையும் இல்லை. ஆக்சன் காட்சிகள் படத்திற்கு பலத்தை சேர்த்திருக்கிறது. எடிட்டிங், கேமரா ஒர்க் எல்லாம் நன்றாக இருக்கிறது. குறிப்பாக ஜிவி பிரகாஷ் பாடல்கள் படத்தில் வேற லெவல். பழைய பாடல்களை ரீமேக்ஸ் செய்தாலும் சிறப்பாக கொடுத்திருக்கிறார் ஜீவி. மொத்தத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஷாலின் மார்க் ஆண்டனி படம் தூள் கிளப்புகிறது.

நிறை:

விஷால், எஸ் ஜே சூர்யா நடிப்பு சிறப்பு

கதைகளம் நன்றாக இருக்கிறது

இடைவேளை காட்சி, இரண்டாம் பாதி அட்டகாசம்

ஜிவி பிரகாஷ் இசை சிறப்பு

ஒளிப்பதிவு எடிட்டிங் அருமையாக இருக்கிறது

குறை:

முதல் பாதி ஆரம்பம் தான் பொறுமையாக சென்று கொண்டிருக்கின்றது

நிறைய லாஜிக் குறைபாடுகள்

சில தேவையில்லாத காட்சிகள்

மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு குறைகள் எதுவும் இல்லை

இறுதி அலசல்:

மொத்தத்தில் மார்க் ஆண்டனி- வெற்றி

Advertisement