சர்கார் சூப்பர் Update..! தளபதி ரசிகர்களுக்கு விருந்து..!

0
228
Sarkar-vijay

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்துள்ள “சர்கார்” திரைப்படதின் படப்பிடிப்புகள் நிறைவு பெற்றுள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் இசை வெளியிட்டு விழா அடுத்த மாதம் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது.

அதே போல கடந்த 24 ஆம் தேதி இந்த படத்தில் இருந்து “சிம்டாங்காரன் ” என்ற பாடல் மட்டும் வெளியாகியிருந்தது. மேலும், இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லுரியில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த விழாவில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் ஒரு லைவ் பர்பார்மன்ஸ் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்கார் படத்தின் “சிம்டாங்காரன்” பாடல் ரசிகர்கள் ட்ரெண்டிங்கில் இருந்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்த தகவல் வெளியாகியுள்ளது.

சர்கார் பாடத்தின் இசை வெளியிட்டு உரிமத்தை பிரபல சோனி மியூசிக் நிறுவனம் பல கோடி கொடுத்து வாங்கியுள்ளது. இந்த தகவலை தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது சோனி நிறுவனம்.