லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயிக்கொண்டு இருந்த நிலையில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி இருந்தது.
இந்த படத்தில் எத்தனையோ நடிகர் நடிகைகள் நடித்திருந்தாலும் அவர்களுக்கு ஒரு அழுத்தமான கதாபாத்திரம் இல்லை. அதே போல இந்த படத்தில் நடிகர் விஜய்க்கேன்றே சில சின்ன சின்ன விஷயங்களை படத்தில் புகுத்தி இருந்தார் லோகேஷ். அந்த வகையில் படத்தில் விஜய் பயன்படுத்திய கார், அவர் வளர்க்கும் பூனை என்று பல விஷயங்கள் படம் ரிலீஸ் ஆகும் முன்பே பிரபலமானது. அதிலும் இந்த படம் வெளியாவதற்கு முனபாகவே விஜய்யின் ஷர்ட் மற்றும் விஜய் அணிந்து இருந்த காப்பு மிகப் பெரிய பிரபலமானது.
அதே போல இந்த திரைப்படம் நம்மவர் படத்தின் தழுவல் என்றும் கூறப்பட்டது. அதற்கு முக்கிய காரணமே இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கமலின் வெறித்தனமான ரசிகர் என்பது தான். மேலும், இந்த படத்தில் நடிகர் விஜய் முதல் பாதியில் குடிக்கு அடிமையாகி இருப்பார். மேலும், ஏன் இப்படி குடிக்கிறீர்கள் என்று யாவராவது கேட்டால் அதற்கு ஒவ்வொரு முறையும் ஒரு காரணம் சொல்லுவார். ஒரு சமயம் கமல் நடித்த புன்னகை மன்னன் கதையையும், ஒரு சமயம் சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் கதையையும் சொல்லும் விஜய் ஒரு சமயத்தில் அஜித் நடிப்பில் வெளியான காதல் கோட்டை படத்தின் கதையை சொல்லுவார்.
வீடியோவில் 1:02 நிமிடத்தில் பார்க்கவும்
ஆனால், விஜய் குடிக்கு அடிமையாக காரணம் பற்றி நடிகர் நாசர், நாயகியான மாளவிகா மோகனனிடம் கூறும் போது, Vc செல்வம் தான் Jdயை இப்படி குடிக்கு அடிமையாக காரணம். அவருக்கு புற்று நோய் இருந்தது. அதற்காக அவர் சிகிச்சை எடுத்துக்கொண்ட போதிலும் அவர் இறந்துவிட்டார். அதன் பின்னர் தான் Jd இப்படி தூங்க முடியாமல் குடிக்கு அடிமையாகிவிட்டான் என்று கூறுவார். நாசர், Vc செல்வம் என்று குறிப்பிட்டது ‘நம்மவர்’ படத்தில் கமலின் பெயர். மேலும், அந்த படத்தில் அவருக்கு புற்று நோய் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் Jd, ப்ரொபஸர் செல்வத்தின் மாணவர் என்று சமூக வலைதளத்தில் பேசப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இது குறித்து லோகேஷ் கனகராஜ் விளக்கமித்துள்ளதாவது, நம்மவர் படத்தில் கல்லூரியை திருத்துவது தான் கதையாக இருக்கும், ஆனால்,ப்ரபசர் என்ற கதாபாத்திரத்தை எழுத உந்துகோளாக இருந்தது ‘நம்மவர் ‘ தான். அதனால் தான் செல்வம் கதாபாத்திரத்தை ஏதோ ஒரு இடத்தில் சொல்ல வேண்டும் என்பதற்கு தான் நாசர் சொன்ன அந்த கதை என்று கூறியுள்ளார்.