மாஸ்டர் இசை வெளியீட்டு விழா சென்னயில் இல்லையா ? அப்போ இந்த ஊரில் தானா?

0
1731
master
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் ரசிகர்கள் மத்தியில் தெறிக்க விட்டது. பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் தற்போது நடித்து வரும் படம் “மாஸ்டர்”. இந்த மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் அவர்கள் கல்லூரி பேராசிரியாக நடிக்கிறார். அதனால் தான் படத்திற்கு மாஸ்டர் என்று தலைப்பு வைத்ததாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். தளபதியும், மக்கள் செல்வனும் இந்த படத்தில் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-

- Advertisement -

இந்த படத்தில் இவர்களுடன் மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், பெருமாள், மேத்யூ ப்ரேம், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து விஜய் அவர்களை வருமான துறையினர் சோதனைக்காக விஜய் அவர்களை அழைத்து சென்றார்கள்.

இது சமூக வலைதளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் பல பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள். இதனை தொடர்ந்து விஜய் அவர்களின் வீட்டில் எந்த ஒரு ஆவணமும் கிடைக்கவில்லை என்றும் செய்திகள் வெளிவந்தது. விஜய் மீது வருமான வரி அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை குறித்து விஜய் ரசிகர்கள் பயங்கரமாக கண்டித்தனர். பல அரசியல் கட்சிகளும் விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் எழுப்பி வந்தனர். பின்னர் மீண்டும் பாஜகவினர் இந்த இடத்தில் படப்பிடிப்பு நடக்க கூடாது என்று போராட்டம் செய்து வந்தனர்.

-விளம்பரம்-

தற்போது இந்த நிலைமை சரியாகி உள்ளது. சமீபத்தில் வெளிவந்த இந்த படத்தின் குட்டி கதை படம் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் பாடல் வெளியீட்டு விழா அடுத்த மாதம் சென்னையில் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், தற்போது மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை கோவையில் நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக மாஸ்டர் படத்தில் நடித்து உள்ள நடிகர் சாந்தனு அவர்கள் மாஸ்டர் குழுவினருடன் விரைவில் கோவைக்கு வருகிறோம். தயாராக இருங்கள் என்று சோசியல் மீடியாவில் கூறியுள்ளார்.

மேலும், சமீப காலமாக விஜயின் நடிப்பில் வெளிவந்த மெர்சல், சர்க்கார், பிகில் ஆகிய படங்களின் பாடல் வெளியீட்டு விழா எல்லாம் சென்னையில் தான் நடந்தது. ஆனால், தற்போது மாஸ்டர் படத்தின் பாடல் விழாவுக்கு சென்னையில் அனுமதி கிடைப்பதில் கொஞ்சம் சிக்கல் ஏற்பட்டு உள்ளது என்றும், அதனால் இசை வெளியீட்டு விழாவை கோவையில் நடத்த இருப்பதாகவும் இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது. தளபதி விஜயின் படத்திற்கே அனுமதி இல்லையா?? என்று விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்தும் கேள்விகளை எழுப்பியும் வருகின்றனர்.

Advertisement