ஷூட்டிங் ஸ்பாட்டில் கொடுத்த முத்தத்தை ஆடியோ லாஞ்சில் திருப்பி பெற்றுக்கொண்ட விஜய் சேதுபதி.

0
1775
master
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் விஜய் சேதுபதி. தன்னுடைய எதார்த்தமான நடிப்பும், பேச்சும் மூலம் இவர் சினிமா உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார். நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் தான். தற்போது நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-
Image

- Advertisement -

. பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “மாஸ்டர்” படத்தில் நடித்து இருக்கிறார் . இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார் . தளபதியும், மக்கள் செல்வனும் இந்த படத்தில் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விஜய்க்கு தன் அன்பு முத்தத்தை கொடுத்து உள்ளார் விஜய் சேதுபதி.

பொதுவாகவே கூகுள் புகைப்படத்தில் விஜய் சேதுபதி தன் ரசிகர்களுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்தால் அதில் அனைவருக்கும் முத்தம் கொடுத்து இருப்பார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. தன்னுடைய அன்பை வெளிப்படுத்தும் விதமாக விஜய் சேதுபதி அவர்கள் தன்னுடைய ரசிகர்கள் அனைவருக்கும் முத்தம் கொடுத்திருப்பார். இதனை தொடர்ந்து அடுத்து வருபவர்களும் அதை பின்பற்ற தொடங்கி விட்டார்கள். இந்த பட்டியலில் தற்போது விஜய்யும் இணைந்துஇருந்தார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யிடம் இருந்து முத்தத்தை பெற்றுள்ளார் விஜய் சேதுபதி. இந்த விழாவில் பேசிய விஜய் சேதுபதி மேடையில் இருந்து கீழே வந்து விஜய்யை கட்டிப்பிடித்தார். பின்னர் விஜய், விஜய் சேதுபதிக்கு முத்தம் கொடுத்தார். அந்த புகைப்படம் இதோ.

Advertisement