அட்லீ படம் குறித்து லோகேஷ் கனகராஜ் போட்ட கமன்ட். என்ன கூறியுள்ளார் பாருங்க.

0
1506
lokesh
- Advertisement -

சினிமாவில் லக் சிலருக்கு அடித்து கொண்டே இருக்கும். அவர்கள் வாழ்வில் நடக்கும் விஷயங்கள் அனைத்தும் சினிமா போல் நடக்கும். அப்படி ஒரு மேஜிக் ஸ்டோரி தான் அட்லியுடையது. இயக்குநராக வேண்டும் என்ற தன் கனவிற்கு அச்சாரமாக, முதல் படமே மெகா பட்ஜெட் படம். ‘எந்திரன்’ படத்தில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார் அட்லி. இதில் ஹீரோவாக தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரம் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

; இதனைத் தொடர்ந்து ஷங்கர், ‘தளபதி’ விஜய்யை வைத்து இயக்கிய ‘நண்பன்’ படத்திலும் அட்லி பணிபுரிந்தார். அதன் பிறகு சிவகார்த்திகேயனை வைத்து ‘முகப்புத்தகம்’ என்ற குறும்படத்தை இயக்கினார் அட்லி. அக்குறும்படம் செம லைக்ஸ் குவித்தது. ‘முகப்புத்தகம்’ குறும்படத்துக்கு பிறகு வெள்ளித்திரையில் அடி எடுத்து வைத்தார் அட்லி. இயக்குநராக அறிமுகமான முதல் படமே பெரிய பட்ஜெட்டில் அமைந்தது.

இதையும் பாருங்க : தமன்னா ஜாடையில் இருக்கும் அவரது அண்ணன். அவரே பதிவிட்ட பழைய புகைப்படம்.

- Advertisement -

அது தான் ‘ராஜா ராணி’ திரைப்படம். ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சந்தானம், சத்யராஜ் என நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. ‘ராஜா ராணி’க்கு பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்யுடன் ‘தெறி’ என்ற படத்துக்காக கூட்டணி அமைத்தார் அட்லி. ‘தெறி’ மாஸ் ஹிட்டாக அட்லிக்கு அடித்தது ஜாக்பாட். ஆம்.. அடுத்தடுத்து விஜய்யை வைத்து படங்கள் இயக்கும் வாய்ப்பு.

‘தெறி’யை தொடர்ந்து ‘மெர்சல், பிகில்’ என தனக்கு மிகவும் பிடித்த ஒரு டாப் ஹீரோவை வைத்து, ஒரு ரசிகனாக அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கினார் அட்லி. அதுமட்டுமின்றி, முன்னணி இயக்குநர்களின் பட்டியலிலும் இடம்பிடித்தார் அட்லி. இப்போது, அட்லி தனது ‘ஏ ஃபார் ஆப்பிள் புரொடக்ஷன்’ நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள திரைப்படம் ‘அந்தகாரம்’. இந்த படத்தினை வி.விக்னராஜன் என்பவர் இயக்கியிருக்கிறார்.

-விளம்பரம்-

இதில் கதையின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன், மிஸா கோஷல், பூஜா ராமச்சந்திரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். தற்போது, இப்படம் தொடர்பாக ‘மாஸ்டர்’ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார். அந்த பதிவில் “இன்று ‘அந்தகாரம்’ என்ற படத்தினை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

Andhaghaaram

நான் சமீபத்தில் பார்த்த படங்களிலையே இது மிகவும் சிறப்பான படமாக இருந்தது. படத்தை பார்த்த பிறகு நான் இயக்குநர் வி.விக்னராஜன் பிரதரின் எழுத்திற்கு ரசிகனாகி விட்டேன். நடிகர்கள் அர்ஜுன் தாஸ் மற்றும் வினோத் கிஷன் இருவருமே மிக அருமையாக நடித்திருக்கிறார்கள். தியேட்டரில் வெளி வந்து வெற்றிபெறப்போகும் ஒரு படம், தயாரிப்பாளர் அட்லி பிரதரின் கையில் ரெடியாக இருக்கிறது.. வாழ்த்துக்கள்” என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருக்கிறார்.

Advertisement