என்னப்பா பொசுக்குன்னு கலாய்சிட்ட – லாரன்ஸ்சின் பர்ஸ்ட் லுக்கிற்கு மாஸ்டர் பட பிரபலம் போட்ட கமன்ட்.

0
7145
master
- Advertisement -

சமீபத்தில் வெளியான லாரன்ஸின் ‘துர்கா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பங்கமாக கலாய்த்துள்ளார் மாஸ்டர் பட பிரபலம். தமிழ் சினிமாவில் நடிகராகவும், நடன இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், நடிகராகவும் திகழ்ந்து வருகிறார் லாரன்ஸ். சினிமாவையும் தாண்டி தொண்டு நிறுவனத்தின் மூலம் நடிகர் லாரன்ஸ் பல்வேறு ஆதரவற்றோர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார். இதனால் இவருக்கு பல்வேறு ரசிகர்களும் இருந்து வருகின்றனர். லாரன்ஸ் என்று சொன்னாலே தற்போது காஞ்சனா பட சீரிஸ் தான் அனைவர்க்கும் நினைவிற்கு வரும்.

-விளம்பரம்-

அந்த அளவிற்கு பேய் படத்தை அலுத்து போகும் அளவிற்கு எடுத்துவிட்டார் லாரன்ஸ். பொதுவாக லாரன்ஸ் பட ஹிட் அடிக்கிறதோ இல்லையோ அவரது படத்தின் பர்ஸ்ட் லுக் வித்யாசமாக தான் இருக்கும். இப்படி நிலையில் நடிகர் லாரன்ஸின் புதிய படத்தின் போஸ்டர்கள் வெளியாகி இருந்தது. இந்த படத்திற்கு துர்கா என்று பெயர் வைத்து உள்ளனர்.

இதையும் பாருங்க : மாலத்தீவு போயும் இத விடலயா ? மாளவிகா வெளியிட்ட புகைப்படம் – Rotate செய்து பார்க்கும் நெட்டிசன்கள்.

- Advertisement -

நேற்று (ஆகஸ்ட் 6) இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. துர்கா படத்தின் சாமியார் கெட்டப் போஸ்டர் ’முனி’, ’காஞ்சனா’, காஞ்சனா 2, ’காஞ்சனா 3’ போன்றே பேய் படம் போன்று தான் இருந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் இரண்டாம் போஸ்டரையும் லாரன்ஸ் நேற்று வெளியிட்டு இருந்தார்.

லாரன்ஸ்ஸின் இந்த போஸ்டரை கண்ட பலரும், என்ன selfie எடுத்துவிட்டு second லுக்னு சொல்றீங்க என்று பங்கமாக கலாய்த்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் மாஸ்டர் படத்தில் ஸ்க்ரிப்ட் ரைட்டரும் ஆடை பட இயக்குனருமான ரத்னகுமார், Snapchat Filter என்று கலாய்த்துள்ளார். இதை பார்த்த ட்விட்டர் வாசிகள் பலர் என்ன பொசுக்குன்னு காலாய்ச்சிட்ட என்று ஷாக்காகியுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement