இதனால் தான் அந்த காட்சியை நீக்கிட்டேன் – டெலீட்ட வீடியோ குறித்து முதன் முறையாக மனம் திறந்த லோகேஷ்.

0
1380
lokesh
- Advertisement -

விஜய் நடித்த மாஸ்டர் படம் வெளியாகி 16 நாளில் அமேசான் பிரைமைல் வெளியானது. மாஸ்டர் திரைப்படத்தை பல்வேறு பிரபலங்களும் OTTயில் கண்டு கழித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் 4.50 நிமிட டெலீடட் வீடியோவை அமேசான் நிறுவனம் கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 6) வெளியிட்டது. ஏற்கனவே படத்தின் நீளம் கொஞ்சம் அதிகமாக இருந்ததால் பல காட்சிகளை கட் செய்து விட்டதாக லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார். இந்த வீடியோவில் சவிதாவிடம் (கௌரி கிஷன்) தவறாக நடந்து கொண்டதால் இரண்டு இளைஞ்சர்களை விஜய் அடித்து இருந்ததால் விஜய்யை கல்லூரி நிர்வாகம் அழைத்து கண்டிக்கும்.

-விளம்பரம்-

அப்போது பெண்களை ஆண்களோடு பழக விடுவதாலும் பெண்கள் அவர்கள் இஷ்டத்துக்கு ஆடை அணிவதாலும் தான் அவர்கள் சவிதாவை அப்படி செய்தார்கள் என்று ஒரு ஆசிரியை கூற, அதற்கு விஜய் பெண்கள் அணியும் ஆடையை குறை சொல்லும் முன் ஆண்களுக்கு எப்படி ஒரு பெண்ணை தொட வேண்டும் என்று சொல்லிக்கொடுங்கள் என்று அறிவுறுத்துவார்.ஆடை பெயரில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அத்து மீறல்களை பற்றி சொன்ன இந்த காட்சியை ஏன் படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள் என்று பலரும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

- Advertisement -

அதே போல இந்த காட்சியில் நடிகை கௌரி கிஷன் சிரித்தால் தான் இந்த காட்சியை நீக்கி விட்டார்கள் என்று பலர் கூறி வந்தனர்.ஆனால், அந்த காட்சியில் தான் சிரிக்கவில்லை என்று கௌரி கிஷன் விளக்கமளித்தார். மேலும், இது குறித்து நீங்கள் இயக்குனரிடம் தான் கேட்க வேண்டும் என்றும் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள லோகேஷ் கனகராஜ், படத்தின் ஃப்ளோ பாதிக்காமல் இருக்கவேண்டும் என்பதற்காக சிலக் காட்சிகளை எடுக்க முடிவு செய்தோம். படத்தின் நீளமும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. அதோடு, விஜய் சார் இந்த மாதிரி பேச ஆரம்பிப்பது செகெண்ட் ஆஃப்ல இருந்துதான். அப்போது, கேரக்டர் முழுமையாக மாறியபிறகு, இந்தக் காட்சிகள் வைத்தால் நேர்கோடாகிவிடும்.

lokesh

இப்படி, அந்தக் காட்சி இடம்பெறாமல் போனதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. பலமுறை யோசித்து யோசித்து எடுத்த முடிவு இது. ஆனால், இந்த முடிவு மிகவும் கஷ்டப்பட்டு எடுத்த முடிவு.எல்லோரும் அந்தக் காட்சியை பாரட்டுகிறார்கள் எனும்போது படத்தில் வைத்திருக்கலாமே என்றுதான் நினைக்கத்தோன்றும். கண்டிப்பாக தோன்றுகிறது. எடுத்த முடிவு எல்லா நேரத்திலும் ஒரே மாதிரி சரியாக இருக்காதில்லையா? அதனால், நீக்கப்பட்ட காட்சிகளை வைத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது என்று கூறியுள்ளார் லோகேஷ்.

-விளம்பரம்-
Advertisement