நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் பல்வேறு பிரபலங்களையும் இந்த கொடிய வைரஸ் விட்டுவைக்கவில்லை. பாலிவுட்டின் டாப் ஸ்டாரான அமிதாப் பச்சன் மற்றும் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி மலையாள நடிகர் பிருத்விராஜ் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அவரது மகனுமான நடிகர் ராம்சரண் நடித்த ரகுள் பிரீட் சிங் நிக்கி கல்ராணி தமன்னா என்று பல்வேறு தளங்கள் கொரோனா தொட்டால் பாதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தார்கள்.

அதே போல தமிழ் சினிமாவை பொறுத்தவரை விஷால் மற்றும் அவரது தந்தை, சரத் குமார், கருணாஸ் என்று பல நடிகர்கள் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்தனர். சமீபத்தில் நடிகர் சூர்யா கூட கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்தார். இப்படி ஒரு நிலையில் , மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும். சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கே நல்ல சிகிச்சை பெற்றுவருவதாகவும் விரைவில் குணமடைந்து திரும்புவேன் என்றும் கூறியுள்ளார். இதனால் லோகேஷ் கனகராஜ்ஜூக்கு பலரும் ஆறுதல் கூறி, விரைவில் குணமடைய வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இறுதியாக மாஸ்டர் படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து கமலை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்க கமிட் ஆகி இருந்தார். இந்த படத்தின் டீஸர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது. தற்போது கமல், தேர்தல் பணிகளில் இருப்பதால், அதை முடிதத்த்தும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார்.

Advertisement
Advertisement