டாக்டர் படத்தில் அனைவரையும் கவர்ந்த இவர் மாஸ்டர் படத்துலேயே செம பேமஸ் ஆனவர் ஆச்சே.

0
2207
Doctor
- Advertisement -

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தற்போது திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் டாக்டர். இந்த படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், யோகிபாபு, வினய் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் சிவகார்த்திகேயன் படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த படத்தின் செல்லம்மா செல்லம்மா, so baby, நெஞ்சமே என்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தில் யோகி பாபு மற்றும் கிங்ஸ்லீ நகைச்சுவை வேற லெவல் என்று சொல்லலாம். அது மட்டுமில்லாமல் வில்லன் கூட்டணியில் இருந்த பல நடிகர்களின் காமெடியும் படத்திற்கு பக்க பலமாக உள்ளது. அந்த வகையில் நடிகர் Bjornsurrao அவர்களின் நகைச்சுவை மக்கள் மத்தியில் ரசிக்க வைத்தது. இந்த படத்தில் இவர் ஆங்கிலம் கலந்த தமிழில் பேசி இருந்தார். இதனாலே இவர் மக்கள் மத்தியில் மிக விரைவாக பரிச்சயமானார். உண்மையிலேயே இவர் யாருக்கு தெரியுமா? தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த மாஸ்டர் படத்தில் ‘Master The Blaster’ என்ற பாடலைப் பாடியவர்.

- Advertisement -

இவர் பாடிய இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் செம வைரல் ஆனது. இவர் அனிருத்தும் இவரும் நெருங்கிய நண்பர். இவர் மாஸ்டர் படத்திற்கு முன்னாடியே நிறைய ஆல்பம் சாங்களை போட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் நாலு பேரும் நல்லா இருந்த ஊரும் என்ற படத்திற்கு இவர் இசையமைத்து இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழ், மலையாளம் என பல மொழிகளிலும் பாடல் எழுதியும், இசை அமைத்தும், பாடியும் வருகிறார். பின் மாஸ்டர் படத்தில் பாடியதன் மூலம் இவர் விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றார்.

May be an image of 3 people, beard, sunglasses and text that says "GOT THE MAN WIAA 形 PLAN RIGHT HERE"

இந்நிலையில் மாஸ்டர் படம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்று கூட அளித்திருந்தார். தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக வைரலாகி வருகிறது. அதில் Bjorn Surrao கூறியது, மாஸ்டர் பட காட்சியை பார்த்து விட்டு தான் இந்த பாடலை எழுதத் தொடங்கினேன். நினைத்ததை விட மிகப் பிரமாதமாக வந்தது. இந்த பாடல் இவ்வளவு ஹிட் ஆனது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. எனக்கு பிடித்த இசையை மக்களுக்கு புரியும் வகையில் சொல்லுவது தான் என் ஆசை என்று கூறி ‘Master The Blaster’ என்ற பாடலை பாடி உள்ளார்.

-விளம்பரம்-
Advertisement