அட,சிவகார்த்திகேயன் இந்த படத்தில் வந்த பையன் தான் மாஸ்டர் படத்தில் வந்த இந்த நடிகரா.

0
2122
master
- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயிக்கொண்டு இருந்த நிலையில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தில் மாளவிகா, ஆண்ட்ரியா, ரம்யா, கௌரி கிஷன், சாந்தனு என்று பலர் நடித்திருந்தாலும் இவர்களுக்கு எல்லாம் படத்தில் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று நெட்டிசன்கள் பல மீம்களை போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர். அதே போல இந்த படத்தில் சூப்பர் சிங்கர் சௌந்தர்யா, Vj தாரா, கலாட்டா குரு, பிரிகிடா, ரமேஷ் திலக் போன்றவர்களுக்கு பெரிதாக கதாபாத்திரம் கொடுக்கப்படவில்லை.

- Advertisement -

இந்த படத்தில் ரசிகர்களுக்கு பரிட்சயமான எத்தனையோ பேர் நடித்து இருந்தாலும். இந்த படத்தில் நாம் குழந்தை நட்சத்திரமாக பார்த்த பல நடிகர்களுக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் மகேந்திரன் துவங்கி பூவையர் வரை நாம் பல குழந்தை நட்சத்திரங்களை படத்தில் நடிக்க வைத்தார். அந்த வகையில் இந்த படத்தில் மாளவிகா மோகனை கேமராவிற்காக கொள்ள செல்லும் இந்த நடிகரும் ஓஒரு குழந்தை நட்சத்திரம் தான்.

இந்த படத்தில் கூர்நோக்கு இல்லத்தில் இருக்கும் சிறுவர்கள் பவானிக்கு எதிராக வாக்கு மூலம் கொடுப்பார்கள். அதனை மாளவிகா போலீசிடம் ஒப்படைக்க செல்லும் போதும் அவரை கொள்ள வருவார் இந்த நடிகர். பின்னர் வீடியோகாளில் பூவையர் இவரை பார்த்து பின்னர் மாளவிகாவை காப்பற்றுவர். இந்த நடிகர் வேறு யாரும் இல்லை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘காக்கி சட்டை’ படத்தில் சிவகார்திகேயனுடன் சில காட்சிகளில் நடித்தவர் தான்.

-விளம்பரம்-
Advertisement