தீம் ம்யூஸிக்குடன் வெளியான அடுத்த அப்டேட். அனிருத் போட்ட ட்வீட். டபுள் சந்தோஷத்தில் ரசிகர்கள்.

0
6061
master
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக பட்டைய கிளப்பி கொண்டு வருபவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் தெறிக்க விட்டது. பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் தற்போது நடித்து வரும் படம் “மாஸ்டர்”. மாநகரம், கைதி போன்ற வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் மாஸ்டர் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக இளம் நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.அதே போல இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். தளபதியும், மக்கள் செல்வனும் இந்த படத்தில் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த படத்தில் இவர்களுடன் சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய் அவர்கள் கல்லூரி பேராசிரியாக நடிக்கிறார். அதனால் தான் படத்திற்கு மாஸ்டர் என்று தலைப்பு வைத்ததாக கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து விஜய் அவர்களை வருமான துறையினர் சோதனைக்காக அழைத்து சென்று இருந்தார்கள். இது சமூக வலைதளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது.

- Advertisement -

இதனை தொடர்ந்து விஜய் அவர்களின் வீட்டில் எந்த ஒரு ஆவணமும் கிடைக்கவில்லை என்றும் செய்திகள் வெளிவந்தது.இந்த பிரச்சினை ஒரு வழியாக சுமுகமாக முடிவடைந்தது. இது அனைவருக்கும் தெரிந்ததே. இதனால் மீண்டும் நெய்வேலியில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது. இதனால் கூட விஜய் அவர்கள் ரசிகர்களை சந்திக்க வேன் மீது ஏறிய கூலிங் கிளாஸை போட்டு கொண்டு மாஸ் காட்டினார். இந்நிலையில் சமீபத்தில் தான் இந்த படத்தின்போஸ்டர்கள் இணையத்தில் வேற லெவல்ல அதிர வைத்துள்ளது. இந்நிலையில் பிப்ரவரி 14 ஆம் தேதி மாஸ்டர் படத்தின் சிங்கிள் ட்ராக் வெளிவர உள்ளதாக அறிவித்து உள்ளனர். இதற்கு ஒரு குட்டி கதை என்றும் டைட்டில் வைத்தனர்.

மேலும், இந்த பாடலை யார் பாட போகிறார்கள் என்று பல கேள்விகள் இணையத்தில் எழுந்து உள்ளது. அதற்கு பலரும் விஜய் தான் என்று கமெண்ட் போட்டு உள்ளனர். தற்போது மாஸ்டர் படத்தின் தீம் மியூசிக் உடன் ஒரு குட்டிக்கதை சிங்கிள் வெளியாக உள்ளது என்று ஒரு வீடியோ வெளியாகி இருந்தது. இந்த நிலையில் ‘குட்டி கதை’ பாடலை விஜய் தான் பாடியுள்ளார் என்று அனிருத் ட்வீட் செய்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement