இளையதளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ரிலீஸ் பற்றிய செய்திகள் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தில் அவரது உறவினரான சேவியர் பிரிட்டோ தான் தயாரித்து இருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது சேவியர் பிரிட்டோ கொடுத்த பேச்சுரை சமூகவலைதளத்தில் மிகுந்த கேள்விக்கு உள்ளானது. ஒரு தயாரிப்பாளரை போல இல்லாமல் சர்ச்சில் இருக்கும் போல மாஸ்டர் படத்தயாரிப்பாளர் பேசினார் என்று சமூகவலைதளத்தில் பல்வேறு நூல்கள் எழுந்தன.

அதேபோல இவரது சொத்துக்களுக்கு பினாமியாக இருந்து வருகிறார் என்றும் அதனால்தான் இவர் மாஸ்டர் படத்தை தயாரிக்கிறார் என்றும் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ பேட்டி ஒன்றில் பேசியதாவது, இந்த படத்தினை தயாரிக்க விஜய் தமக்கு கொடுத்ததற்கு காரணம் இதுகுறித்து இரண்டு வருடத்திற்கு முன்பாகவே தான் பேசியதாக கூறியுள்ளார். இரண்டு வருடத்திற்கு முன்னால் தான் விஜயிடம் ஒரு படத்தை தயாரிக்க கேட்டுக்கொண்டேன் அதை நினைவில் வைத்துக்கொண்டு பிகில் படம் முடிந்தவுடன் எனக்கு இந்த படத்தை தயாரிக்கும் வாய்ப்பை கொடுத்தார்.

Advertisement

மேலும், நான் விஜய்யின் செந்தூரப்பாண்டி, தேவா, ரசிகன் போன்ற படங்களை தயாரித்து இருக்கிறேன் .நான் தயாரித்த அனைத்து படங்களுக்கும் வெளியில் கடன் வாங்கித்தான் தயாரித்தேன். இதற்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. விஜய்யை என்னுடைய பினாமி என்று சொல்வது எல்லாம் பொய். அவரவருடைய உழைப்பால் முன்னேறி வருகிறார். ஒரு நடிகராக மட்டும் தான் எனக்கு இந்த படத்தை தயாரிக்கும் வாய்ப்பை கொடுத்திருக்கிறார். என்னுடைய தொழில் வேறு அவருடைய தொழில் வேறு என்று கூறியுள்ளார்.

மேலும் சமீபகாலமாக விஜய்யை மதம் குறித்து விமர்சித்து வருவது குறித்து பேசியுள்ள சேவியர். மற்றவர்கள் சொல்வது போல அப்படி எல்லாம் கிடையாது. ஒருவேளை அவர் அப்படி இருந்தால் அவர் ஒரு இந்து பெண்ணை மணந்து இருக்கமாட்டா.ர் அவ்வளவு ஏன் அவரது தந்தை கூட இந்து பெண்ணை தான் திருமணம் செய்து கொண்டார். மேலும் என்னுடைய மகள் ஒரு இந்து பையனைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறார். நான் இந்துக்களுக்கு கோவில்களை கட்டி கொடுத்திருக்கிறேன் அதேபோல இஸ்லாம் மதத்திற்கும் நிறைய உதவிகளை செய்திருக்கிறேன் என்னால் முடிந்தவரை அனைத்து மதங்களுக்கும் நான் உதவியை செய்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார்

Advertisement
Advertisement