தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரும், நடிகர் விஜயின் உறவினருமான சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரித்துறை திடீர் அதிரடி சோதனை நடத்தி உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீன செல்போன் நிறுவனங்களின் உதிரிபாகங்களை ஏற்றுமதி செய்வதில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது. காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் பாக்ஸ்கான் தொழிற்சாலை உள்ளது. இங்கு செல்போன் நிறுவனங்களான ஓப்போ, ரெட்மி மற்றும் பிளாக்பெரி, ஐபோன் போன்ற 9 வகை வகையான செல்போன்களுக்கு இங்கிருந்து உதிரிபாகங்கள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

செல்போன் உதிரிபாகங்கள் ஏற்றுமதி :

அதோடு செல்போன் உதிரிபாகங்கள் பெற்று அவற்றை முழுமையாக செல்போனை மாற்றுவதற்கான தொழிற்சாலைகளை பாக்ஸ்கான் தொழிற்சாலை வளாகத்திலேயே ரெட்மி, ஓப்போ போன்ற சீன செல்போன் நிறுவனங்கள் தயாரித்து வருகிறது. மேலும், இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் செல்போன் உதிரிபாகங்கள் மற்றும் செல்போன்கள் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இது இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றது.

Advertisement

சீன செல்போன் நிறுவனங்கள் வருமான வரி ஏய்ப்பு :

இந்த நிலையில் சீன செல்போன் நிறுவனங்கள் வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்தன. இதனடிப்படையில் கடந்த 3 நாட்களாக சீன செல்போன் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், சீன செல்போன் நிறுவனங்கள் தொழிற்சாலையிலும், பாக்ஸ்கான் தொழிற்சாலையிலும் சுமார் 30 வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 21ஆம் தேதி காலையில் இருந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து சென்னை கொட்டிவாக்கம் நேரு நகரில் ஒப்போ நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதேபோல் டெல்லி, மும்பை, பெங்களூரில் உள்ள சீன நிறுவனங்களின் அலுவலங்களிலும் சோதனை நடந்தது. பின் தமிழகத்தில் நடைபெற்ற சோதனையில் ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். அதில் சீன செல்போன் நிறுவனங்களின் உதிரி பாகங்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வது ‘கெர்ரி லாஜிஸ்டிக்’ நிறுவனம் என்பது தெரியவந்துள்ளது.

Advertisement

பிரிட்டோ வீட்டில் சோதனை :

இதனைத் தொடர்ந்து இந்த நிறுவனத்தின் உரிமையாளர் மாஸ்டர் பட தயாரிப்பாளரும், நடிகர் விஜயின் உறவினர் சேவியர் பிரிட்டோ என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சென்னை அடையார் கஸ்தூரிபாய் நகரிலுள்ள சேவியர் பிரிட்டோ வீடு, மயிலாப்பூர் மற்றும் மண்ணடியில் கெர்ரி லாஜிஸ்டிக்ஸ் நிறுவன அலுவலகம் மற்றும் குடோன்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தி இருந்தனர். மேலும், 9 இடங்களில் இந்த சோதனை நடந்தது. சோதனை நடைபெற்ற இடங்களில் பலத்த பாதுகாப்புடன் போலீஸ் போடப்பட்டிருந்தது.

Advertisement

சோதனை முடிவில் கிடைத்த ஆவணங்கள் :

சோதனை முடிவில் ஏராளமான ஆவணங்களை வருமானத் துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். அவற்றை ஆய்வு செய்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், மாஸ்டர் படத்தின் போது விஜய் வீட்டில் ரெய்டு நடந்து பெரிய சர்ச்சையானது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இப்படி ஒரு நிலையில் ஒரு வேளை சேவியர் பிரிட்டோவினால் தான் விஜய் வீட்டில் ரெய்டு நடந்திருக்குமோ? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement