மாஸ்டர் அமேசான் பிரைமிலா ? அதுவும் இந்த மாசமேவா. அமேசான் அதிகாரபூர்வ அறிவிப்பு.

0
1377
master
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த “பிகில்” படம் மிக பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது. பிகில் படத்தை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் நடித்து உள்ள படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து உள்ளார். சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ஹோட்டல் லீலா அரண்மனையில் நன்முறையில் நடைபெற்றது.

-விளம்பரம்-

மேலும், கடந்த ஏப்ரல் மாதமே மாஸ்டர் படம் ரிலீஸ் ஆக வேண்டியது. கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் படத்தின் பணிகள், ரிலீஸ் தேதி எல்லாம் தள்ளி வைக்கப்பட்டது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு OTT நிறுவனங்கள் பெரிய அளவில் லாபம் பார்த்து வருகின்றன. ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டில் முடங்கி கிடப்பதால் OTT தளம் வழியாக படங்களை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் மாஸ்டர் திரைப்படம் இந்த மாதம் 14ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாவதாக அமேசானின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தார்கள். ஆனால். இது குறித்து படக்குழுவினர் மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகி இருந்தால் அமேசானில் ஆகஸ்ட் மாதம் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. அதனால்தான் இந்த அறிவிப்பை அமேசான் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது என்றுதெரிவித்து உள்ளார்களாம். மேலும் மாஸ்டர் திரைப்படம் நேரடியாக திரையரங்குகளில் தான் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க திரையரங்கில் வெளியீட முடியாத மாஸ்டர், ஜகமே தந்திரம் ஆகிய படங்களையும் அமேசான் வாங்கியுள்ளதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இதுவரை தமிழில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட படம் பிகில் தான்.14 கோடி ரூபாய்க்கு பிகில் படம் வாங்கப்பட்டது. அதற்கு ஏற்றவாறு பிகில் படம் 200 கோடிக்கு மேல்\வசூல் சாதனை செய்தது. இந்நிலையில் தற்போது மாஸ்டர் படத்தை அமேசான் நிறுவனம் 15 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளது. தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் சின்ன பட்ஜெட் படம் என்பதால் தான் இந்த அளவிற்கு விற்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement