‘வாத்தியார்’ வந்துட்டார் – ஆவலுடன் எதிர்பார்த்த மாஸ்டர் படத்தின் இரண்டாவது பாடல்.

0
1897
master
- Advertisement -

பிகில் படத்தை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்துவந்தார். அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் “பிகில்” படம் வெளியானது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் நடித்து உள்ளார். மேலும், விஜயின் பிகில் படம் ரசிகர்களை தெறிக்க விட்டது. இது அனைவருக்கும் தெரிந்ததே. பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யின் அடுத்த படமான ‘மாஸ்டர்’ படம் குறித்த பல தகவல்கள் இணையங்களில் வெளி வந்துகொண்டு இருக்கிறது. இந்த படத்தை மாநகரம், கைதி படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி இருக்கார்.

-விளம்பரம்-

விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார் . இவர்களுடன் இந்த படத்தில் சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி பாக்யராஜ், ப்ரிகிடா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், சேத்தன், அழகம் பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துஉள்ளனர் . இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். மேலும், இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து இருக்கிறது.

- Advertisement -

இந்த படத்தின் படப்பிடிப்புகள் 129 நாட்களில் முடிந்ததாக லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். தற்போது இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா வரும் மார்ச் மாசம் 15 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் செகண்ட் சிங்கள் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று(மார்ச் 9) வெளியாகி இருந்தது மேலும், அந்த பாடலின் டைட்டில் ‘வாத்தி கமிங்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் நேற்று முதலே இந்த படத்தின் இரண்டாவது பாடலுக்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வந்தார்கள். இந்த நிலையில் சமீபத்தில் இந்த பாடல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளியான ‘குட்டி ஸ்டோரி’ பாடல் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. மேலும், யூடுயூப்பில் கூட இந்த பாடல் பல்வேறு சாதனைகளை செய்தது. எனவே இந்த வாத்தி பாடலும் அதே அளவு வரவேற்பை பெறுமா என்பதை இன்னும் ஒரு சில மணி நேரத்தில் கணித்துவிடலாம்.

-விளம்பரம்-
Advertisement