இணையத்தில் லீக்கான விஜய் சேதுபதியின் மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில். அதிர்ச்சியில் படக்குழு.

0
11200

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த “பிகில்” படம் மிக பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது. பிகில் படத்தை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் நடித்து உள்ள படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து உள்ளார். சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ஹோட்டல் லீலா அரண்மனையில் நன்முறையில் நடைபெற்றது.

கடந்த ஏப்ரல் மாதமே படம் ரிலீஸ் ஆக வேண்டியது.கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் படத்தின் பணிகள், ரிலீஸ் தேதி எல்லாம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் விஜய்யின் மாஸ்டர் படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. கொரோனா லாக்டவுனால் மாஸ்டர் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தது.

- Advertisement -

தற்போது அரசு போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை செய்ய அனுமதி அளித்துள்ளார்கள். மேலும், மாஸ்டர் படத்தின் எடிட்டிங் பணிகள் மீண்டும் துவங்கபட்டது. படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து விட்டதால் மாஸ்டர் படம் விரைவில் முழுமை பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து மேக்கிங் வீடியோவின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்பது அறிந்த விஷயம் தான். இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் சேதுபத்தில் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. இதனால் படக்குழுவினர் கொஞ்சம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மேலும், மாஸ்டர் படத்தின் டீஸர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 22 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement