நடிகர், காமெடியன், நிகழ்ச்சி தொகுப்பாளர், சமூக சேவகர் என்ற பன்முகங்களை கொண்டவர்.1985 ஆம் ஆண்டு கன்னிராசி படத்திலும் டெலிவரி பாய் வேடத்தில் நடித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் கமல் விஜயகாந்த் சத்யராஜ் என்று பல நடிகர்களை தொடர்ந்து இன்றைய தலைமுறை நடிகர்களான விஜய் அஜித் விக்ரம் சூர்யா விஷால் என்று பல நடிகர்களின் படத்திலும் நடித்திருக்கிறார்.இப்படி ஒரு நிலையில் கடந்த சிவராத்ரி அன்று மயில்சாமி மாரடைப்பால் மரணமடைந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது உடல் ஏவிம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தான் நடிகர் மயில்சாமியின் இறப்பது குறித்தும், அவர் மது பழக்கத்திற்கு அடிமை என சில தவறான தகவல்களை பிரபல செய்தி ஊடகங்கள் யூடியூப் போன்ற சோசியல் மீடியாவில் பரப்பியது. இது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து மயில் சாமியின் மகன் பேசியுள்ளார்.

Advertisement

மயில்சாமியின் மகன் பேட்டி :

இதனை பற்றிய மயில் சாமியின் மகன் கூறுகையில் “அப்பா மறைவு குறித்து எங்களிடமே கேட்டிருக்கலாம் அதனை விடுத்தது பலர் மிகவும் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். நேற்று கூட யூடியூபில் பார்த்தேன் மயிலசாமிக்கும் மகன்களுக்கும் சன்டை என்றெல்லம் போட்டிருந்தனர். இதனை ஏன் பதிவிடுகின்றனர் என்று தெரியவில்லை. அப்பா பற்றி பலருக்கும் தெரிந்தும் கூட இப்படி அவர்கள் வீடியோ போடுவது மனதிற்கு வருத்தமாக இருக்கிறது எனக் கூறினார்.

அறிவு இருந்தால் :

மேலும் குடிப்பழக்கத்தினால் தான் இறப்பு என சொல்லப்படுவதற்கு விளக்கம் கூறிய அவர் “அவர்கள் அப்படி போடுவதில் பிரயோஜனம் கிடையாது. எல்லோரும் அறிவுள்ளவர்கள் தானே, எதாவது சந்தேகம் என்றால் வீட்டிலோ அல்லது நண்பர்களிடமோ, மற்றவர்களிடம் கேட்போம். இதே போன்று இந்த விஷியத்தை பற்றியும் கேட்டால் முடிந்து விட்டது. அதை விட்டுவிட்டு ஏன் இப்படி தவறான செய்தியை பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. இது இப்படியே தொடர்ந்தால் கண்டிப்பாக வழக்கு பதிவு செய்ய வாய்ப்பிருக்கிறது என்றார்.

Advertisement

அப்பா ஹேப்பி மேன் :

மேலும் அவர் பேசுகையில் என்னுடைய அப்பா ஒரு ஹாப்பிமேன், அவர் அடிட் கிடையாது, கடைசி மாதங்களில் குடிப்பதை மருத்துவர் அறிவுரை கூறியதால் நிறுத்திவிட்டார். எங்களுடைய அப்பா எப்போதுமே எங்களிடம் கூறுவது மகிச்சியாக இருங்கள், முடிந்த அளவிற்கு மற்றவர்களுக்கு உதவி செய்யிங்கள் என்றுதான் கூறுவார். அதாவது தனக்கு எடுத்துக்கொண்டு மீதம் இருப்பதை பூட்டி வைக்காமல் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றுதான் சொல்லிகொடுத்திருக்கிறார். இப்போதும் கூட சிலர் உதவி கேட்டனர். நீங்கள் யாரும் கவலை படவேண்டும் சிறிது காலம் மட்டும் காத்திருங்கள் நாங்களும் எங்களுடைய அப்பாவை போல உங்களுக்கு உதவி செய்கிறோம்.

Advertisement

15 நிமிடத்தில் நடந்தது :

என்னுடைய அப்பா தர்மம் எங்கே இருக்கோ அங்கேதான் எம்.ஜி.ஆர் இருக்கிறார் என்று கூறுவார்கள். விவேக் சார் மறைந்த போது எங்களுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இந்நிலையில் எங்களுடைய அப்பாவும் மறைந்து விட்டார். அவர் இல்லை என்ற வருத்தம் இருந்தால் கூட அவர் வெளியில் படப்பிடிப்புக்காக சென்றிருக்கிறார் என்று தான் நினைத்துக்கொள்வோம். ஏனெற்றால் அனைத்தும் 15 நிமிடங்களில் நடந்து முடிந்து விட்டது. 4.30 மணிவரையில் நன்றாகத்தான் இருந்தார், 4.45ல் இருந்து 5க்குள் இவை நடந்து முடிந்துவிட்டது. அவர் மறைந்தது வருத்தமாக இருந்தாலும் அவர் எங்களுடன் தான் எப்போதும் இருக்கிறார் என்று அந்த பேட்டியில் கூறினர்.

Advertisement