பிரபல நடிகை மீனா தன்னைப் பற்றி வரும் கிசுகிசுகளுக்கு பதிலடி கொடுத்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் மீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவுலகில் அறிமுகமாகி பின் கதாநாயகியாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இதற்கு இடையில் மீனா அவர்கள் வித்யாசாகர் என்பவரை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு மகள் இருக்கிறார். மேலும், மீனாவின் கணவருக்கு ஏற்கனவே நுரையீரல் பிரச்சனை இருந்ததால் இரண்டு நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய அளவுக்கு அவருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இதற்கு காரணம் புறாக்களின் எச்சம் கலந்த காற்றை சுவாசித்ததினால் இந்த நோய் ஏற்பட்டது என்று கூறப்பட்டது. பின் இவருடைய உடல்நிலை மிகவும் மோசமாகி சிகிச்சை பலன் இல்லாமல் இறந்துவிட்டார். வித்யாசாகரின் இறப்பிற்கு பல பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார்கள்.
மீனா குறித்த கிசுகிசுக்கள் :
மேலும், மீனாவிற்கு ஆறுதலாக அவருடைய தோழிகள்தான் இருக்கின்றார்கள். கணவரின் இழப்பில் இருந்து மீண்டு வந்த மீனா தற்போது மீண்டும் படங்களில் நடித்துக் கொண்டும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றியும் வருகிறார். பிரபலங்கள் மற்றும் கிசுகிசுக்களை பிரிக்கவே முடியாது. அதுவும் நடிகைகள் பற்றிய கிசுகிசுக்கள் அவ்வப்போது வருவது சகஜம்தான். இந்நிலையில் கணவர் இறந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், மீனா பற்றி பல்வேறு வதந்திகள் வந்து கொண்டு தான் இருக்கிறது.
Rumors are created by haters,
— Meena (@ActressMeena_) July 18, 2024
spread by fools,
and accepted by idiots 🙂#Meena pic.twitter.com/DI8ieqGLVB
மீனாவின் பதிலடி:
அதாவது நடிகை மீனா இரண்டாம் திருமணம் செய்ய போகிறார் என்ற கிசுகிசு தான் அடிக்கடி வந்து கொண்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் பிரபல நடிகர் ஒருவரை மீனா உடன் இணைத்து காதல் கிசுகிசுவையும் சிலர் உழவ விடுகின்றனர். தற்போது அவர்களுக்கெல்லாம் மீனா பதிலடி கொடுக்கும் வகையில் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். அதில், ‘ வதந்திகளை நம்மை வெறுப்பவர்கள் தான் உருவாக்குகிறார்கள், அதை முட்டாள்கள் தான் பரப்புகிறார்கள், மேலும் அதை அடி முட்டாள்கள் தான் நம்புகிறார்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.
ரசிகர்கள் ஆறுதல் :
மேலும் மீனாவின் இந்த பதிவை பார்த்து ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். பின் சிலர் இதுவும் கடந்து போகும் என்று பதிவிட்டு வருகின்றனர். கடைசியாக தமிழில் மீனா ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார். தற்போது ‘ரவுடி பேபி’ என்னும் படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இவர் யூடியூப் சேனல் ஒன்றில் தன்னுடைய வீட்டை சுற்றி காண்பித்து இருந்தார். அதில் மிகப்பெரிய தோட்டத்துடன் மீனா வீடு இருக்கிறது.
மீனாவின் பங்களா:
கேரளா ஸ்டைலில் பிரம்மாண்டமாக மீனா வீட்டை கட்டி இருக்கிறார். மேலும், கற்களால் ஆன சிற்பங்கள், அழகிய ஓவியங்கள் என்று பாரம்பரிய முறையில் வீடு இருக்கின்றது. அவருடைய வீட்டில் பல அறைகள், நீச்சல் குளம், மினி தியேட்டர் என்று பல வசதிகளும் இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் மீனாவுடைய பேங்க் பேலன்ஸ் கோடிக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 35 முதல் 40 கோடி வரை இவருக்கு சொத்து மதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.