அம்மாவ பத்தி அப்படி எல்லாம் எழுதாதீங்க,அவரும் மனுஷன் தான – மீனா மகளின் கலங்க வைக்கும் பேசி – கண் கலங்கிய சூப்பர் ஸ்டார்.

0
646
meena
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்பவர் மீனா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமாகி தற்போது வரை இவர் படங்களில் கலக்கிக் கொண்டு வருகிறார். மேலும், இவர் ரஜினி, கமல், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

மீனா அவர்கள் கடந்த 2009 ஆம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த சாஃப்ட்வேர் என்ஜினியரான வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் நைனிகா என்ற மகள் இருக்கிறார். மீனாவின் மகளும் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார். இவருடைய இறப்பிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கலை தெரிவித்து இருந்தார்கள்.

- Advertisement -

மீனாவிற்கு இது ஒரு பெரிய இழப்பு என்றே சொல்லலாம். மீனாவை இந்த இழப்பில் இருந்து மீட்டு வரும் முயற்சியில் அவருடைய நண்பர்களும் இருந்தனர். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீனா தேறி வருகிறார். சமீபத்தில் தான் சினிமா படப்பிடிப்புகளிலும் மீனா கலந்து கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் மீனா இரண்டாவது திருமணம் செய்தாக சில வதந்திங்கள் பரவியது.

அதே போல மீனா இரண்டாம் முறை கர்ப்பமாக இருப்பதாக கூட வதந்திகள் பரவியது. இப்படி ஒரு நிலையில் இந்த வதந்திகள் பற்றி எல்லாம் மீனாவின் மகள் நைனிகா பதில் அளித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் மீனா திரையுலகில் 40 ஆண்டை நிறைவு செய்து இருந்ததை கொண்டாடும் விதமாக இவருக்கு தனியார் மீடியா ஒன்று நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்து இருந்தது. இந்த விழாவில் பல பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியில் மீனா மகள் பேசிய வீடியோ ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அதில் பேசிய அவர் ‘என் அப்பா இறந்த பின்னர் என்னுடைய அம்மா மிகவும் மன அழுத்தத்திற்கு சென்று விட்டார் அது அவருக்கு வலியையும் வேதனையும் கொடுத்தது அந்த சமயத்தில் நான் அவருக்கு ஆறுதல் கூறிருந்தேன். நிறைய செய்தி சேனல் எண் அம்மாவை பற்றி போலியான விஷயங்களை பரப்பியிருந்தார்கள் என் அம்மா இரண்டாம் முறை கர்ப்பமாக இருப்பதாக எல்லாம் எழுதினார்கள்.

ஆனால் முதலில் அதை பார்க்கும்போது வேடிக்கையாக தான் இருந்தது ஆனால் இதுவே திரும்பத் திரும்ப பார்த்தபோது அது எனக்கு பிடிக்காமல் போய்விட்டது எனக்காக இதை நிறுத்துங்கள். அம்மா ஒரு நடிகையாக இருக்கலாம். ஆனால், உங்களைப் போன்று அவரும் ஒரு மனிதர் தான். அவருக்கும் உணர்வுகள் இருக்கும். எனவே, இது போன்று எல்லாம் செய்யாதீர்கள் யாராவது உங்களுக்கு இப்படி செய்தால் உங்களுக்கு கஷ்டமாக இருக்காதா’ என்று உருக்கமாக பேசி இருந்தார். நைனிகா இப்படி பேசியதை பார்த்து அரங்கில் இருந்த பலர் கண் கலங்கினர். மீனா மற்றும் ரஜினி கூட அவரின் இந்த பேச்சை கேட்டு கண் கலங்கினார்.

Advertisement