Home பொழுதுபோக்கு சமீபத்திய

என் புருஷனுக்கு நான் சடங்கு பண்ணதுல அவங்களுக்கு என்ன பிரச்சனை – மீனாவின் நறுக் கேள்வி.

0
305
meena
-விளம்பரம்-

தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்பவர் மீனா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமாகி தற்போது வரை இவர் படங்களில் கலக்கிக் கொண்டு வருகிறார். மேலும், இவர் ரஜினி, கமல், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். சமீப காலமாக இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார். இவருடைய இறப்பிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். மீனாவிற்கு இது ஒரு பெரிய இழப்பு என்றே சொல்லலாம்.

-விளம்பரம்-
meena

அது மட்டும் இல்லாமல் மீனாவின் தந்தை இறந்த பிறகு அவருடைய இடத்தில் இருந்து குடும்பத்தையே வித்தியாசாகர் தான் வழி நடத்தி இருந்தார் என்று பலரும் கூறியிருக்கிறார்கள். தன்னுடைய தாய், தந்தையை போலவே வித்தியாசாகரும் மீனாவை குழந்தை போல கவனித்து வந்திருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் வித்யாசாகர் இறந்து அவருடைய அஸ்தியை மீனா கையில் ஏந்தி கொண்டு செல்லும்போது அவருடைய குடும்பத்தினர் பலருமே பதறி விட்டனர் என்று சொல்லலாம். சோசியல் மீடியாவில் கூட மீனா தன்னுடைய கணவரின் அஸ்தியை ஏந்திக்கொண்டு சென்ற புகைப்படங்கள் எல்லாம் வைரலாகி இருந்தது. அது மட்டும் இல்லாமல் ஒரு பெண் அஸ்தியை ஏந்தலாமா? இறுதித் சடங்கை செய்யலாமா? என்றெல்லாம் சோசியல் மீடியாவில் கேள்வி எழுந்திருந்தது. இன்னொரு பக்கம், மீனாவுடைய கணவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் கூறியிருந்தார்கள்.

மீனா கணவர் இறப்பு குறித்த சர்ச்சை:

ஆனால், இதற்கு எதுக்குமே மீனா பதிலளிக்காமல் தான் இருந்தார். மீனாவை இந்த இழப்பில் இருந்து மீட்டு வரும் முயற்சியில் அவருடைய நண்பர்களும் இருந்தனர். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீனா தேறி வருகிறார். இந்த நிலையில் ஒரு பிரபல சேனலுக்கு மீனா அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருந்தது, நான் கணவர் இறந்தவுடன் அந்த துன்பத்தில் இருந்து மீண்டும் வருவேன் என்று நினைக்கவில்லை. இதற்கெல்லாம் காரணம் என்னுடைய அம்மா, குடும்பம், நண்பர்கள் தான். பொதுவாக நான் நண்பர்களின் விசேஷங்களுக்கு போயிருக்கிறேன். ஆனால், என்னோட கஷ்டத்தில் நிறைய பேர் இருந்தார்கள். எனக்கு தெரியாதவங்க கூட வந்து எனக்கு ஆறுதல் சொன்னார்கள். நான் இதை எதிர்பார்க்கவே இல்லை. இதை தவிர சில நண்பர்கள் என் கூடவே இருந்து வெளியில் கூட்டிட்டு போவது, என்னுடன் நேரத்தை செலவிடுவது என்று இருந்தார்கள்.

meena

மீனா அளித்த பேட்டி:

-விளம்பரம்-

அவர்களால் தான் நான் இப்போது அந்த துன்பத்திலிருந்து விடுபட்டு இருக்கிறேன். என் கணவர் ஹைதராபாத்தில் தங்கி இருந்த இடத்தில் புறாக்கள் அதிகமாக இருந்தது. அதன் எச்சத்தை சுவாசித்ததால் தான் அவருடைய நுரையீரல் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான அறிகுறி எதுவும் ஆரம்பத்தில் தெரியவில்லை. கொரோனா எங்கள் வீட்டில் எல்லோருக்கும் வந்தது. ஆனால், எல்லோருக்கும் குணமாகிவிட்டது. அவருக்கு ஏற்கனவே நுரையீரல் பிரச்சனை இருந்ததால் இன்னும் பாதிப்பு அதிகமாக இருந்தது. அதனால் தான் இப்படி ஆகிவிட்டது. ஒருவேளை நுரையீரல் கிடைத்திருந்தால் கண்டிப்பாக என் கணவரை காப்பாற்றி இருக்க முடியும். ஆனால், அப்படி நுரையீரல் கிடைக்கிறது என்பது ரொம்ப ரொம்ப கஷ்டமாக ஒன்று.

-விளம்பரம்-

கணவர் குறித்து சொன்னது:

அப்படியே நுரையீரல் கிடைத்தாலும், அது ஆரோக்கியமாக இருக்கணும், உடல் எடை, உயரம் இவைகள் கூட பொருந்தணும் என்று மெடிக்கல் சார்ந்த நிறைய விஷயங்கள் இருக்கிறது. இதெல்லாம் எனக்கு இதுவரை தெரியவே தெரியாது. 20 வருடங்களுக்கு முன்பு நான் கண்தானம் செய்திருக்கிறேன். எல்லோரும் என் கண் அழகாக இருக்கும் என்று சொல்லுவார்கள். அதனால் தான் நான் போன பிறகும் என்னுடைய கண்கள் பூமியில் இருக்கட்டும் என்று கண்தானம் செய்தேன். ஆனால், உறுப்பு தானம் செய்ததில்லை. நிறைய பேருக்கு இதைப் பற்றி இன்னும் தெரியவில்லை. உயிரைப் பறிகொடுத்த சமயத்தில் குடும்பத்தினரிடம் சென்று உடல் உறுப்பு தானத்தை பற்றி எடுத்து சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அதனால்தான் உடல் உறுப்பு தானம் பற்றி நிறைய பேருக்கு இனியாவது நாம் எடுத்து சொல்லணும். இது தெரிந்து கொண்டு பலரும் உறுப்பு தானங்களை செய்ய முன்வரணும்.

உடல் உறுப்பு தானம்:

நாம் எது செய்தாலும் மக்கள் அதை கவனிப்பார்கள். அதனால் தான் நானும் என்னுடைய எல்லா உறுப்புகளையும் தானம் செய்து விட்டேன். கமல் சார் கூட ஏற்கனவே உடல் உறுப்புக்களை தானம் செய்திருக்கிறார். நாம் இறந்த பிறகு இந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் நான்கு பேருக்கு உபயோகமாக நம்முடைய உறுப்புகள் இருக்கட்டும். என்னுடைய கணவருக்கு இறுதி சடங்கு நான் செய்தது பற்றி பேசி இருந்தார்கள். என் கணவருக்கு நான் சடங்கு செய்தால் மற்றவர்களுக்கு இதில் என்ன பிரச்சனை? என் கணவருக்கு என்ன பிடிக்கும்? பிடிக்காது? எது செட் ஆகும்? ஆகாது? இதெல்லாம் என்னை விட வேற யாருக்கும் பெரிதாக தெரிந்து விட முடியாது என்று தெளிவுடனும், பக்குவத்துடனும் மீனா கூறி இருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் பலரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news