படம் வெளியாகி சில நாட்களிலேயே திருமணத்தை முடித்த இளம் நடிகை.

0
80831
rashi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் இயக்குனர்களின் இமயம் என்று அழைக்கப்படுபவர் பாரதிராஜா. கிராமிய படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர் பாரதிராஜா. இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட். படத்தில் மண்வாசனையை காண்பித்தவரும் இவர் தான். சமீப காலமாகவே இவர் இயக்கத்தில் படங்கள் வெளியாகாமல் இருந்தது. தற்போது இயக்குனர் பாரதிராஜா இயக்கி, தயாரித்து, நடித்திருக்கும் படம் ‘மீண்டும் ஒரு மரியாதை’. இந்த படத்தில் ஹீரோவே நம்ம பாரதி ராஜா தான். பல ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜா அவர்கள் நடித்து இயக்கிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை ராசி நட்சத்திரா. இந்த படத்தில் இவர்களைத் தவிர ஜோ மல்லூரி, மவுனிகா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படம் கடந்த வாரம் தான் திரையரங்கில் வெளியாகி இருந்தது. இந்த படத்திற்கு மக்கள் கலவையான விமர்சனங்களை தந்து உள்ளார்கள். மேலும், இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா உட்பட மூன்று பேர் இசை அமைத்து உள்ளார்கள்.

- Advertisement -

இதையும் பாருங்க : மீண்டும் சித்ராவுடன் இணைந்து நடிக்க மாட்டேன். ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த குமரன்.

இந்த படம் முழுவதும் இரண்டே இரண்டு கதாபாத்திரங்களை வைத்து தான் கதை நகர்கிறது. வாழ்ந்து முடிந்த வயதான ஒருவருக்கும், வாழ ஆரம்பிக்கும் ஒரு இளம் பெண்ணுக்கும் இடையேயான நட்பு, அவர்களின் பயணம் தான் மீண்டும் ஒரு மரியாதை படம். இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்த நடிகை நட்சத்திரா அவர்களுக்கு தற்போது திருமணம் நடை பெற்று உள்ளது. நட்சத்திரா அவர்கள் சத்யானந்தன் என்பவரை திருமணம் செய்து உள்ளார்.

-விளம்பரம்-
actress nakshatra and sathyanandhan marriage

இவர்களுடைய திருமணம் பொள்ளாச்சியில் மிக விமர்சையாக நடந்து உள்ளது. இவர்களுடைய திருமணத்திற்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என அனைவரும் கலந்து கொண்டு இவர்கள் இருவரையும் வாழ்த்தி உள்ளார்கள். தற்போது இவர்களுடைய திருமணக்கோலம் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement