மீண்டும் சித்ராவுடன் இணைந்து நடிக்க மாட்டேன். ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த குமரன்.

0
56541
kumaran

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியின் தற்போதைய சூப்பர் ஹிட் தொடராக இருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்.. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும்,பாராட்டும் பெற்று வருகிறது. குடும்ப பந்தத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த தொடரில் மூன்று ஜோடிகள் நடித்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜோடி என்னவோ கதிர்-முல்லை ஜோடி தான். மேலும், இவர்கள் இருவரும் கூட இந்த சீரியலின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் என்று கூட சொல்லலாம்.

Image result for pandian stores kathir mullai

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கமிட்டாகி அடுத்த சில மாதங்களிலேயே இவங்க ரெண்டு பேரும் ஜோடி நிகழ்ச்சியில் இணைந்து நடனம் ஆடினார்கள். ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர்களுக்கு உள்ள என்ன நடந்துச்சுன்னு தெரியல ரெண்டு பேருமே எந்த நிகழ்ச்சியிலும் ஜோடியாக கலந்து கொள்ளவில்லை. அதிலும் இவர்கள் இருவரில் இருந்து ஒருவர் சீரியலை விட்டு விலக போறாங்கள் என்று கூட இணையங்களில் வதந்தியை கிளப்பினார்கள். இப்படி சித்ரா,குமரன் இடையே நடந்த பிரச்சனையெல்லாம் வதந்தி, சீரியல் விளம்பரத்திற்காக செய்தது என்று கூறி இருந்தார்கள்.

இதையும் பாருங்க : குக்கூ வித் கோமாளியில் தன்னுடன் இருந்தவருக்கு சினிமாவில் வாய்ப்பு வாங்கி கொடுத்துள்ள வனிதா.

-விளம்பரம்-

ஆனால், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் குமரன், அதில் சித்ராவுடன் இருப்பதை காண்பித்து தங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருந்தார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற குமரனிடம் நீங்களும் சித்ராவும் மட்டும் ஒரு ஜோடியாக இணைந்து தனியாக ஒரு தொடரில் நடிப்பீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டு இருந்தது இதற்கு பதிலளித்த குமரன் கண்டிப்பாக யோசிப்பேன் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நாங்கள் ஒரு மூன்று ஜோடிகளில் ஒருவராக வருகிறோம் மேலும் தற்போது பாண்டியன்ஸ்டோர் சிலரும் கதிர் முள்ளை இருவரும் எப்போது சேர்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்து வருகிறது ஒருவேளை நாங்கள் இருவர் மட்டும் தனியாக வேறு ஒரு தொடர்பில் நடித்தால் அது கதிர் முள்ளை கதாபாத்திரத்தில் எதிர்பார்ப்பை நிச்சயம் குறைந்துவிடும் எனவே கண்டிப்பாக சித்ராவுடன் மீண்டும் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்தால் நான் கண்டிப்பாக யோசிப்பேன் என்று கூறி உள்ளார்.

Advertisement