மீரா ஜாஸ்மின் வீட்டில் நேர்ந்த இழப்பு – அவரின் பதிவிற்கு ஆறுதல் கூறி வரும் ரசிகர்கள்

0
457
- Advertisement -

பிரபல நடிகை மீரா ஜாஸ்மின் தந்தை இறந்திருக்கும் செய்தி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் மீரா ஜாஸ்மின். 2001 ஆம் ஆண்டு வெளியான சூத்ரதாரன் என்ற படத்தில் நடித்து சினிமா துறைக்கு அறிமுகமானார். அதன் பின் சாக்லேட் பாய் மாதவன் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘ரன்’ படத்தின் மூலம் தான் மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

-விளம்பரம்-

இந்த படத்தின் மூலம் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டார் மீரா ஜாஸ்மின். அதன் பின்னர் சினிமா துறையில் மீரா ஜாஸ்மினுக்கு தொட்டதெல்லாம் பொன்னானது. புதிய கீதை, ஆஞ்சநேயா, மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து, மெர்குரிப் பூக்கள், பரட்டை என்ற அழகுசுந்தரம் என பல படங்களில் நடித்தார். அதுமட்டுமல்லாம் தமிழ் சினிமாவில் முன்னனி நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித் ஆகிய இரண்டு ஹீரோக்களுடன் நடித்த பெருமையும் இவருக்கு இருக்கிறது.

- Advertisement -

மீரா ஜாஸ்மின் :

இவர் இதுவரை தமிழ் மற்றும் மலையாளத்தில் 50க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதன் பின்னர் 2008ல் இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான மெண்டலின் ராஜேஷ் என்பவரை மீரா ஜாஸ்மின் திருமணம் செய்துகொள்வதாக இருந்தது. ஆனால், தனது 32 வயதில் மீரா ஜாஸ்மின் சாப்டவேர் இன்ஜினீயர் அனில் ஜான் டைட்டசை திருமண செய்துகொண்டு துபாயில் செட்டில் ஆகிவிட்டார். பின்னர் 2016 ஆம் ஆண்டு விவாகரத்தும் பெற்றார்.

-விளம்பரம்-

மீரா ஜாஸ்மினின் ரீ-என்ட்ரி :

அதன் பின்னர் தொடர்ந்து நடித்து வந்த மீரா உடல் எடை கூடியதால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார். சமீப நாட்களாக பல விதமான போட்டோ ஷூட்களை நடத்தி வரும் இவர் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் இவர் மீண்டும் நடிக்க துவங்கி இருக்கிறார். அந்த வகையில் தற்போது இயக்குநர் சசிகாந்த் இயக்கும் ‘டெஸ்ட்’ படத்தின் மூலம் ரீ- என்ட்ரி கொடுத்து உள்ளார்.

மீரா ஜாஸ்மின் நடிக்கும் படங்கள்:

இப்படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா ஆகியோர் நடிக்க உள்ளனர். சமீபத்தில் தான் டீசர் வெளியாகி இருக்கிறது. தற்போது படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதை அடுத்து மீரா ஜாஸ்மின் அவர்கள் மக்கள், விமானம், படவெட்டு, குயின் எலிசபெத் போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் மீரா ஜாஸ்மினின் தந்தை இறந்து இருக்கும் செய்தி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மீரா ஜாஸ்மினின் தந்தை இறப்பு:

மீரா ஜாஸ்மின் தந்தை பெயர் ஜோசப் பிலிப். இவர் எர்ணாகுளத்தில் வசித்து வந்தார். இவருடைய மனைவி ஏலியம்மா ஜோசப். இவர்களுக்கு மீரா ஜாஸ்மின் மட்டுமில்லாமல் இன்னும் மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். தற்போது மீரா ஜாஸ்மின் தந்தை வயது மூப்பின் காரணமாக காலம் ஆகி இருக்கிறார். இவருக்கு 83 வயது. இவருடைய மறைவிற்கு திரை உலக பிரபலங்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement