எல்லா பக்கமும் ஒரே மாதிரி இருக்கு, மேடையில் தமன்னா குறித்து பேசிய ராதாரவி – சின்மயி போட்ட பதிவை பாருங்க.

0
479
radharavi
- Advertisement -

பிரபல நடிகை தமன்னாவின் நிறம் குறித்து வர்ணித்து பேசிய ராதாரவியின் பேச்சுக்கு சின்மயி பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவாராக திகழ்ந்து வரும் ராதாரவி சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர் தான். கடந்த 2019 ஆம் ஆண்டு கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ராதாரவி நயன்தாரா குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த விழாவில் பேசிய ராதாரவி, நயன்தாரா நல்ல நடிகை. இவ்ளோ நாள் தம் கற்றதே பெரிய விஷயம். அவங்களை பற்றி வராத (தப்பான) செய்தியெல்லாம் இல்லை. அதையும் தாண்டி நிக்கிறாங்க. தமிழ்நாட்டு மக்கள் எல்லாத்தையும் 4 நாளுக்கு தான் ஞாபகம் வெச்சுப்பாங்க. அப்புறம் விட்ருவாங்க. நயன்தாரா பேயாகவும் நடிக்கிறாங்க, சீதாவாகவும் நடிக்கிறாங்க.அப்போலாம் கடவுளாக நடிங்க கே.ஆர்.விஜயா போன்றவர்களை தான் தேடுவார்கள். ஆனால் இப்போது யார் வேணும்னாலும் நடிக்கலாம்.

-விளம்பரம்-

பார்த்தவுடனே கும்பிடறவங்களையும் போடலாமா, பார்த்தஉடனே கூப்பிடுறவங்களையும் போடலாம்” என ராதாரவி பேசினார். இது பலராலும் கடும் கண்டனத்திற்கு உள்ளானது. ராதாரவியின் இந்த பேச்சையடுத்து நடிகை நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், மூத்த நடிகரான ராதாரவிஇளம் நடிகர்களுக்கு ஒரு தவறான முன்னதாரணம் எனவும் ராதாரவி போன்ற ஆட்காளால் தான் பெண்களுக்கு பல பிரச்சனை உருவாகிறது. வெறும் விளம்பரத்திற்காக ராதா ரவி இதுபோல பேசுவதாகவும் அதை கேட்டு சில பார்வையாளர்கள் கை தட்டியதை கண்டு தான் வேதனை அடைந்ததாகவும் கூறி இருந்தார்.

- Advertisement -

இதையும் பாருங்க : பறவைகளின் எச்சம் என்ன செய்யும் ? மனிதர்களுக்கு அதனால் என்ன பாதிப்புகள் ஏற்படும். இதோ முழு விவரம்.

கனல் படத்தின் இசை வெளியிட்டு விழா :

இதையடுத்து நடிகர் ராதாரவி திமுக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இப்படி ஒரு நிலையில் இயக்குனர் சமய முரளி இயக்கத்தில் ‘கனல்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை த நைட்டிங்கேல் புரோடக்சன் தயாரித்துள்ளது. இப்படத்தில் ஜான் விஜய், கிருஷ்ணன், சுவாதி, ஸ்ரீதர் மாஸ்டர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் தென்மா மற்றும் சதீஷ் சக்கரவர்த்தி இசையமைத்துள்ள ‘கனல்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்று இருந்தது.

-விளம்பரம்-

தமன்னாவை வர்ணித்த ராதாரவி :

இந்த விழாவில் பேசிய ராதாரவி ‘அந்த தமன்னாவை பார்த்து பயந்துவிட்டேன் என்னங்க ஒரு பக்கத்தில் கூட கருப்பு இல்லை நானும் சுத்தி சுத்தி தேடி பார்த்தேன் ஏர்போர்ட்டில் அவர் எனக்கு வணக்கம் சொன்ன போது நான் சுத்தி சுத்தி பார்த்தேன் எங்கேயாவது ஒரு பக்கம் கருப்பு இருக்காதா ஆனால் அவ்வளவும் வெள்ளை தலைமுறையை கூட கலர் மாற்றி விடுகிறார்கள் இந்த பொண்ணு கதாநாயகி என்று சொன்னதும் ஏதோ கிளாமராக பண்ணி இருக்கும் என்று வேற ஒரு எண்ணத்தில் தான் வந்தேன் ஆனால் படத்தில் பார்த்தால் பெரிய காவியத்தலைவி போல செய்து இருக்கிறார்’ என்று பேசி உள்ளார்.

சின்மயி போட்ட கமண்ட் :

இப்படி ஒரு நிலையில் ராதாரவியின் இந்த பேச்சு குறித்து கமன்ட் செய்துள்ள சின்மயி ‘என்ன டப்பிங் யூனியனில் இருந்து தடை செய்த தலைவர் இவர் தான்’ என்று பதிவிட்டுள்ளார். சின்மயி வைரமுத்துவிற்கு அடுத்தபடியாக ராதாரவியை தான் அடிக்கடி விமர்சித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட பெண் ஒருவர் ஆண்களை தெரு நாயுடன் ஒப்பிட்டு பேசி இருந்தது பெரும் சர்ச்சையானது. இதற்கு பிரியாணி மேன் தன்னுடைய ஸ்டைலில் பதிலடி கொடுத்து இருந்தார்.

அவரின் வீடியோவை பகிர்ந்த பத்திரிகையாளர் சோனியா ‘ இந்த பிரியாணி மேன் சைக்கோ இன்னும் திருந்தலையா? ஏற்கனவே அர்ச்சனா பாத்ரூம் டூர் வீடியோக்கு அவ்ளோ அப்யூஸ் பாத்ரூம் போறா குறைக்கு மதன் ஓபிக்கு முட்டு கொடுத்துட்டு இருந்தான், இப்ப இப்படி ஒரு வீடியோ. திருந்தாத ஜென்மம்.’ என்று பதிவிட்டு சின்மயியையும் Tag செய்து இருந்தார். இதற்கு பதில் அளித்த சின்மயி, பிரியாணி மேனை மட்டும் கண்டித்து இருந்தார்.

நாயுடன் ஒப்பிட்ட சின்மயி :

இதற்கு ரசிகர் ஒருவர் ‘ஆண்களை தெருநாய் என்று அந்த பெண் சொன்னதை பற்றி மட்டும் ஏன் பேசவில்லை’ என்று கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த சின்மயி கேட்டிருந்தார். மனிதர்களை விட பெண்களும் மனிதர்களும் நாய்களை நம்பகமானவர்களாகக் காண்பார்கள் என்று நான் நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை – ராதா ரவி மற்றும் தமிழ் புலவரை விட ஒரு அறையில் தெருநாய் இருந்தால் நான் பாதுகாப்பாக இருப்பேன்’ என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement