தமிழ், மலையாளம் என ஒரு காலத்தில் கலக்கி வந்தவர் மீரா ஜாஸ்மின். இவர் விஷாலுடன் சண்டைக்கோழி படத்தில் குறும்பானா நாயகியாக வந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார். இதை அடுத்து ரன் படத்திலும் வெகுளியான சேட்டை மிகுந்த பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்த மீரா ஜாஸ்மின்.மலையாளத்தில் உலகிலும் பிசியாக இருந்தால் இவர் திடீரென காணாமல் போய்விட்டார் பிறகு 2014 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட கையோடு சினிமா துறையில் இருந்தும் விலகிவிட்டார்.
மீரா ஜாஸ்மின் கேரளாவைச் சேர்ந்த இவருக்கும், வயலின் இசைக் கலைஞர் ஒருவருக்கும், காதல் இருந்ததாக, முதலில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், துபாயில், மென்பொருள் இன்ஜினியராக பணியாற்றும், கேரளாவைச் சேர்ந்த, அனில் ஜான் டைட்டஸ் என்பவருடன், மீராவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இருவருக்கும், கடந்த 9ல், கொச்சியில், மீரா ஜாஸ்மின் வீட்டில், சார் பதிவாளர் முன்னிலையில், ரகசிய பதிவு திருமணம் நடந்தது. இதற்கிடையே, மணமகன் அனில் சார்பில், கேரள ஐகோர்ட்டில், ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், “பெங்களூரைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன், எனக்கு நட்பு இருந்தது. தற்போது, மீராவுடன், எனக்கு திருமணம் நடக்கப் போகும் தகவல் தெரிந்ததால், அந்த பெண்ணும், அவரின் தந்தையும், திருமணத்தை நடத்த விட மாட்டோம் என, மிரட்டல் விடுத்துள்ளனர். எனவே, எங்களின் திருமணத்துக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்’ என, கோரியிருந்தார். இதையடுத்து, மீரா அனில் திருமணத்துக்கு பாதுகாப்பு அளிக்கும்படி, ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.
கவர்ச்சியை மெருகேற்றி கொண்ட மீரா ஜாஸ்மின் :-
சமீபத்தில் ஒரு நகைக்கடையில் மீரா ஜாஸ்மினை கண்டுபிடித்த ரசிகர்கள் அவருடைய போட்டோக்களை வைரல் ஆக்கினர். அதில் மிகவும் உடல் எடை கூடி அடையாளமே தெரியாமல் இருந்தார் மீரா ஜாஸ்மின். அந்த போட்டோக்கள் செம வைரல் ஆகி வந்தன. பின்னர் திடீரென சமூக ஊடகங்களுக்கு என்ட்ரி கொடுத்த மீரா ஜாஸ்மின் தனது ஹாட்டஸ்ட் புகைப்படங்களை போஸ்ட் செய்ய ஆரம்பித்தார். இந்த புகைப்படங்களில் பாலிவுட் நாயகிகள் ரேஞ்சுக்கு ஒல்லி பெல்லியாக காட்சி அளித்த மீரா ஜாஸ்மின், நாட்கள் செல்ல செல்ல மேலும் தனது கவர்ச்சி மெருகேற்றினார்.
சினிமாவில் விலகுவதற்கு முன் நடித்த படங்கள் :-
தமிழில் இறுதியாக 2014 ஆம் ஆண்டு விஞ்ஞானி என்ற படத்தில் நடித்திருந்தார். அறிவியல் புனைக்கதை திரைப்படமான இதை பார்த்தி என்பவர் எழுதியிருந்தார். இந்த படத்தில் மீரா ஜாஸ்மின் விவேக் உள்ளிட்டோர் முக்கிய இடங்களில் நடித்திருந்தனர். தற்போது மீண்டும் படங்களுக்கு ரீ என்ட்ரி கொடுத்துள்ள மீரா ஜாஸ்மின் தற்போது மகள் என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக 2010 ஆம் ஆண்டு பூமரம் என்னும் படத்தில் காமியோவாக தோன்றியிருந்தார் மீரா ஜாஸ்மின்.
நடிகர் நரேனுடன் பார்ட்டியில் மீரா ஜாஸ்மின் :-
தேசிய திரைப்பட விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ள மீரா ஜாஸ்மின் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளி வந்த கைதி, விக்ரம்2 என படங்களில் முக்கிய வேடங்களில் மாஸ் காட்டினார். நரேனுடன் பார்ட்டியில் கொடுத்துள்ள போஸ் வைரலாகி வருகிறது. இந்த போஸுடன் மீண்டும் இணைவது உங்கள் பாதையை ஒளிரச் செய்யும். அரவணைப்பு மற்றும் மென்மையும் அனுபவிக்க வைக்கிறது அந்த பொக்கிஷமான நிகழ்வுகள் மீண்டும் எழும்பியதற்கு நன்றி அன்பே நரேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.