தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் வரவு மேகா ஆகாஷ். இன்னும் ஒரு படம் கூட வெளியாகவில்லை ஆனால் இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம். கௌதம் மேனன் இயக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
சென்னையை சேர்ந்த மேகா ஆகாசுக்கு 22 வயது தான் ஆகிறது. ‘மறு வார்த்தை பேசாதே’ என்னும் ஒரே வீடியோ சாங்கில் செம்ம ரீச் ஆகிவிட்டார். இந்த படம் எப்போது ரிலீஸ் என ஏங்கி கொண்டிருக்கின்றனர் இவரது ரசிகர்கள்.
இந்நிலையில் சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் தனுசுடன் நடித்த அனுபவம் குறித்து கூறினார் மேகா, மேலும், அவரிடம் உங்களுக்கு பிடிக்காதது எது என்ற கேள்விக்கு பதில் அளித்தார்.
அவரிடம் பிடிக்காதது என எதுவுமே இல்லை. அவர் ஒரு மிகச்சிறந்த நடிகர். சூட்டிங் வந்துவிட்டால் அமைதியாகிவிடுவார். நான் கூட ஏதாவது பேசுவேன். ஆனால் அவர் என்னை விட அமையாக இருப்பார். அது தான் அவரிடம் எனக்கு பிடிக்காது எனக் கூறினார் மேகா ஆகாஷ்