கைகுழந்தயாக இருக்கும் இந்த பரபல நடிகை யாரென்று தெரிகிறதா.! முடிந்தால் கண்டு பிடியுங்கள்.!

0
23365
Megha-Akash
- Advertisement -

தனது முதல் படத்திலேயே தமிழ் சினிமாவின் மாபெரும் நடிகரின் படத்தில் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இந்த இளம் நடிகை. ஆரம்பத்தில் தெலுங்கு படத்தில் அறிமுகமான இவர் பின்னர் ஒல்லி நடிகரின் படத்தில் தமிழில் அறிமுகமாக இருந்தார்.

-விளம்பரம்-

ஆனால் அந்தப் படமோ துப்பாக்கியிலிருந்து வெளிவராமல் பல ஆண்டுகளாக தடைபட்டுக் கொண்டே இருக்கிறது. ஒல்லி நடிகர் படம் வெளிவராமல் இருந்த நிலையில் ஒல்லி நடிகருக்கு தமிழ் சினிமாவில் நேர் போட்டியான அந்த சர்ச்சை நடிகரின் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால் அந்த படமும் படுதோல்வி அடைந்தது.

இதையும் பாருங்க : மதுமிதாவிற்கு உண்மையில் நடந்தது என்ன.! மதுமிதாவை நேரில் சந்தித்த டேனியல் பேட்டி.! 

- Advertisement -

அதன்பின்னரும் தமிழில் இவருக்கு ஒரு சில படங்களில் வாய்ப்பு வந்த வண்ணம் இருந்தது. இறுதியாக காத்தாடி விடும் நடிகரின் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. தற்போது அம்மணி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஒரு வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார்.

-விளம்பரம்-

ஆனால், தற்போது அம்மணிக்கு தமிழில் எந்த பட வாய்ப்பும் இல்லை .மேகமாய் தமிழ் சினிமாவில் நுழைந்த இந்த இளம் நடிகை தற்போது நல்ல பட வாய்ப்பிற்காக காத்துக்கொண்டிருக்கிறார். இருப்பினும் சமூகவலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இந்த இளம் நடிகை அடிக்கடி தனது புகைப்படத்தை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தனது குழந்தைப்பருவ புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Advertisement