மெய்யழகன் மூலம் சம்பாதித்தேனா? இவங்க தான் என் உலகம் -`Birdman’ சுதர்சன் சொன்ன எக்ஸ்க்ளூஸிவ் தகவல்

0
141
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் வெளியான பல்வேறு திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்து இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான படம் ‘மெய்யழகன்’. இப்படத்தில் நடிகர் அரவிந்த்சாமி, ஸ்ரீதேவி, தேவதர்ஷினி, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை சூர்யா ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரித்திருக்கிறது.

-விளம்பரம்-

படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. மேலும், படத்தில் அரவிந்த்சாமி நடித்த அருள்மொழி கதாபாத்திரத்தின் உண்மையான அரவிந்த்சாமி தான் சுதர்சன் ஷா. இவர் சென்னை சிந்தாதரிப்பேட்டையை சேர்ந்தவர். இவர் வீட்டிலேயே ஆயிரக்கணக்கான கிளிகள், பறவைகள், விலங்குகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், மெய்யழகன் படத்தில் என்னோட வீடும் கிளிகளும் வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம். ஆனால், இதை நான் பெயர் புகழ் கிடைக்கனும் என்று எதிர்பார்த்து செய்யவில்லை.

- Advertisement -

சுதர்சன் ஷா பேட்டி:

பறவைகள் மீதான பாசம் மக்கள் மத்தியில் வேண்டும் என்ற விழிப்புணர்வு வந்தாலே போதும் என்பதுதான் என்னுடைய நோக்கம். அது மெய்யழகன் படத்தின் மூலம் நிறைவேறியது எனக்கு ரொம்ப சந்தோஷம்.
கிளிகளுக்கு உணவு தருவதை நான் 15 வருடங்களாக செய்து கொண்டிருக்கிறேன். எங்க அப்பாவோட இறப்பு என்னை ரொம்ப அதிகமாகவே பாதித்தது. அதில் இருந்து தான் பறவைகள், விலங்குகள் மீதான நேசிப்பை ரொம்ப ஆத்மார்த்தமாக நான் செய்து கொண்டிருக்கிறேன். மெய்யழகன் படத்தில் உங்களை மையப்படுத்தி அரவிந்த்சாமி நடிக்கிறார் என்று சொல்லி பிரேம் சார் ஓட டீம் என்னிடம் வந்து பேசினார்கள்.

படம் குறித்து சொன்னது:

அதுமட்டுமில்லாமல் 2டி தரப்பில் இருந்தும் பேசினார்கள். சூர்யா சார் எனக்கு ரொம்ப பிடிக்கும். சமூக அக்கறை உள்ள மனிதர். அவர் கேட்டு நான் மறுக்க முடியுமா? அதனால் ஓகே சொல்லிவிட்டேன். கிளிகளுக்கு உணவு கொடுக்கும் காட்சிகள் எடுக்க என்னோட வீட்டை இரண்டு நாட்கள் கேட்டார்கள். ஆனால், நான் ஒரே நாளில் முடித்து விட்டார்கள். மேலும், அரவிந்த்சாமி சார் கிளிகளுக்கு உணவு உணவு கொடுக்கும் போது கோடை காலம். அவ்வளவு வெயில் அடித்தது. மற்ற நடிகர்களாக இருந்திருந்தால் வெயில் தாங்க முடியாமல் சாட் ஆரம்பிக்கும் போதே வந்திருப்பார்கள். ஆனால், அவர் கிட்டத்தட்ட கிளிகள் வருவதற்காக மூணு மணி நேரம் அந்த வெயிலில் இருந்தார்.

-விளம்பரம்-

மெய்யழகன் படக்குழு:

அவர் படத்துக்காக இல்லை உண்மையிலேயே கிளிகளை நேசித்தார் என்பதை அதை வைத்து தான் எனக்கு தெரிந்தது. அவர் மட்டும் இல்லாமல் மொத்த சினிமா யூனிட்டிம் கிளிகளுக்காக ரொம்ப ஆர்வத்துடன் காத்திருந்தார்கள். பொதுவாக புதிதாக வருபவர்களிடம் வந்து கிளிகள் உணவு வாங்காது. அதனால் அரவிந்த்சாமி முன்னாடி நான் நின்று கொண்டேன். அதற்கு பிறகு தான் கிளிகள் வந்தது. அவர் உணவு கொடுத்தார். அதை ரொம்ப அழகாக படத்தில் காண்பித்திருந்தார்கள். ஷூட்டிங்கில் ஒர்க் பண்ற டெக்னீசியன்களும் ரொம்ப குசியாக செல்போனில் வீடியோ எல்லாம் எடுத்தார்கள். படம் வெளிவந்த பிறகு அந்த காட்சியை பார்க்கும்போது ரொம்ப அழகாக இருந்த.து மக்களும் ரொம்ப பாராட்டினார்கள்.

பறவைகள் உணவுகள்:

கிளிகளுக்கும் பறவைகளுக்கும் ஒரு நாளைக்கு 3 ஆயிரம் ரூபாய் வரை உணவு கொடுக்கிறோம். கிளிகள் அதிகமாக அரிசி, வேர்க்கடலை தான் சாப்பிடும். இதற்காக நான் யாரிடமும் நிதி கேட்கவில்லை. என்னுடைய சொந்த காசை வைத்து தான் உணவு கொடுத்து வருகிறேன். கிளிகள், பறவைகள் மட்டுமில்லாமல் 50 பூனைகளும் 100 ஆடுகளும் வளர்கிறேன். இதனால் நிறைய பொருளாதார சிக்கல்கள் வருகிறது. அதையெல்லாம் சமாளிக்க எவ்வளவோ எங்களுடைய செலவுகளை குறைத்துக் கொண்டோம். அதேபோல் படத்திற்காக ஒரு ரூபாய் கூட நான் வாங்கவில்லை. நீங்கள் வாங்கிக் கொண்டால் தான் ஷூட்டிங் பண்ணுவோம் என்று அன்பு தொல்லை கொடுத்தார்கள். ஆனால், அப்போதும் வாங்கி கொள்ளவில்லை. அதேபோல் சிங்கப்பூர் சலூன் படத்திலிருந்து இதே மாதிரி என்னோட வீட்டை காண்பித்தார்கள். அதற்குமே நான் எந்த பணமும் வாங்கவில்லை என்று எமோஷனலாக கூறியிருக்கிறார்

Advertisement