தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய். தற்போது வளர்ந்து வரும் கால கட்டங்களில் இவர் தான் சினிமா உலகில் நம்பிக்கை தூண் என்று கூட சொல்லலாம். மேலும், இவருக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் ரசிகர்கள் உள்ளார்கள். அதோடு பாக்ஸ் ஆபிஸில் இவருடைய படம் தான் முதலிடத்தில் இருக்கும். தளபதி என்ற ஒரு சொல் சொன்னாலே போதும் ரசிகர்களின் கரகோஷத்திற்கும், கூச்சலுக்கும் பஞ்சமில்லை. அந்த அளவிற்கு தனக்கென ஒரு ரசிகர் படையை சேர்த்து உள்ளார் தளபதி விஜய்.
தளபதி விஜயின் கை அசைவை பார்ப்பதற்கு என்றே மக்கள் கூட்டம் திரண்டு வரும். விஜய் காண கோடான கோடி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் விஜயின் தீவிர ரசிகர் ஒருவர் விஜயை பார்க்க முடியாமல் மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளார். இதை நினைத்து அந்த மனநலம் பாதிக்கப்பட்ட தந்தையின் மகன் கதறி அழுதபடி டிக் டாக் மூலம் வீடியோ ஒன்றை செய்து உள்ளார்.
இதையும் பாருங்க : திடீரென்று இரண்டாம் திருமணம் செய்து கொண்ட அமலா. மாப்பிள்ளை யார் தெரியுமா?
அந்த வீடியோவில் அவர் சொல்லியிருப்பது, என்னுடைய தந்தை விஜய்யின் தீவிர ரசிகர். இது அவருடைய விஜய் ரசிகர் மன்ற உறுப்பினர் கார்டு. என் தந்தை விஜய்யை பார்க்க வேண்டும் என்று பல வருடங்களாக காத்துக் கொண்டு இருக்கிறார். அதனால் அவர் மன நலம் பாதிக்கப்பட்டார். என் தந்தை இறப்பதற்கு முன்னாடியாவது ஒரு முறை என் தந்தை விஜயை பார்த்தால் போதும். என் தந்தையின் நிலை குறித்து விஜய் சாரை பார்ப்பதற்கு எல்லா இடத்திலுமே நான் முயற்சி செய்து விட்டேன் ஒன்றும் பலனில்லை.
கிட்டத்தட்ட இரண்டு, மூன்று வருடங்களாக நான் முயற்சி செய்து வருகிறேன். பெரிய இடத்தில் கூட நான் சொன்னேன். எல்லாரும் பார்க்கலாம் பார்க்கலாம் என்று சொல்லி தட்டி கழித்து விடுகிறார்கள் தவிர பார்க்க அனுமதிக்க விடுவதில்லை. இதனால் எங்க அப்பா மனநலம் பாதிக்கப்பட்டார். என் தந்தை குறித்து நான் சொன்னால் இது எல்லாம் பொய், நடிக்கிறான் என்றெல்லாம் சொல்கிறார்கள்.
திடீரென்று என் அப்பாவிற்கு ஏதாவது ஒன்று ஆனால் நான் என்ன செய்வது ? யார் பொறுப்பு? எங்க அப்பா உயிரை காப்பாற்ற வேறுவழி இல்லை. என் அப்பா ஒரு முறையாவது விஜய் சாரை பார்க்க வேண்டும் என்று கதறி அழுதபடி அவர் கூறினார். இவர் இப்படி சொன்ன வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்தாவது தளபதி விஜய் இந்த தீவிர ரசிகரை பார்க்க செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் திரையரங்குகளில் வெறித்தனமாக வசூல் செய்தது. பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தற்போது நடித்து உள்ள படம் “மாஸ்டர்”. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இந்த படத்தினை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தில் இருந்து பாடல்கள் வெளியாகி இருந்தது. இந்த பாடல் வெளியாகி சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங்கில் உள்ளது.