மெர்சல் நாளை வெளிவரவுள்ளது. ரசிகர்களை செம்ம கொண்டாட்டத்திற்கு எடுத்து செல்லவுள்ளது. தளபதியை ஸ்கிரீனில் பார்த்தால் போதும் என்று ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்-ன் 100-வது படமாக பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `மெர்சல்‘.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாளை ரிலீசாக இருக்கும் இப்படத்தில் விஜய் ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisement

அதை தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் மெர்சல் எத்தனை திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வரை மொத்தம் 3292 தியேட்டர்கள் புக் ஆகியுள்ளது என அந் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா, சுனில், மிஷா கோஷல், யோகி பாபு, ஹரீஷ் பேரடி, மொட்டை ராஜேந்திரன், சீனு மோகன், சண்முக சிங்காரம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.  இந்நிலையில் இப்படம் சமூக வலைதளங்களில் அதிக சாதனை படைத்துள்ளது .

Advertisement

விஜய் அட்லீ காம்பினேஷனில் இரண்டாவது பிரமாண்டமான படம் மெர்சல். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பாடல்கள், டீசர் அனைத்தும் வெளியாகிவிட்டது படத்தின் டிரைலர்மட்டும் வரவில்லை . கரணம் படத்தின் முதல் இரண்டு டீசர்களே படத்தின் புரொமோஷனை எதிர்பார்த்ததை விட அதிக புரோமோசனை அல்லியது.டிரைலர் இல்லாமல் அதிக புரமோஷன் மற்றும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம் அதிக யுடியுப் வியுக்கள் பெற்ற படம் இன்றுவரை இது டிரென்டிங்கிள் உள்ளது . இப்படம் திரைக்கு வரும் முன்பே அதிக சாதனை படைத்துள்ளது . அதிக இன்னல்கள் சந்தித்த படமென்றும் கூறலாம். நேற்றுவரை இப்படத்தின் சென்சார் பிரச்சினை நடந்தது.
மெர்சல் படத்தில் புறாவை வைத்து எடுக்கப்பட்ட காட்சி கிராபிக்ஸ் என் ஆதாரம் தராததால் விலங்குகள் நல வாரியம் படக்குழுவிற்கு நோட்டிஸ் அனுப்பி இருந்தது. இது சம்மந்தமான மீட்டிங் நேற்று காலை 10 மணி முதல் நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அது சம்மந்தமான நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டு படத்திற்கு அந்த புறா காட்சிகளுக்கு ‘ஆட்சேபனை இல்லை ‘ ஒளிபரப்பிக்கொள்ளாளம் என்ற NOC – நோ அபிஜக்சன் சான்றிதலை கொடுத்துள்ளது விலங்குகள் நல அமைப்பு வாரியமான AWBI.

Advertisement

இதனால் நாளை மறுநாள் மெர்சல் ஓடம் வெளியாவது உறுதியாகி உள்ளது. விஜய் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் இது போன்ற ஒரு நல்ல முடிவு கிடைத்துள்ளது. என்னவாயினும் தற்போது இந்த வெற்றியை தளபதி ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

இதனால் படத்தில் எந்த ஒரு காட்சியும் கட் செய்யப்படாமல் அப்படியே வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் மொத்த ரன் டைம் 2 மணி நேரம் 47 நிமிடங்கள் ஆகும். இதனால் உற்சாகத்தில் உள்ள படக்குழு டிக்கெட் முன்பதிவு சம்மந்தமான வேலைகளை முடுக்கியுள்ளது. இந்நிலையில் இப்படம் மீண்டும் ஒரு சாதனை படைத்துள்ளது . தற்போது பல திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கிவிட்டது, அனைத்து இடங்களிலும் ஹவுஸ் புல் தான், இதில் நேற்று சென்னையின் பிரபலமான திரையரங்கம் வெற்றியில் முன்பதிவு தொடங்கியது.

முன்பதிவு தொடங்கிய சில நொடிகளில் பலரும் புக்கிங் செய்ய சர்வரே சில மணி நேரம் வேலை செய்யவில்லை.

மேலும், இந்தியளவில் அதிகம் டிக்கெட் புக்கிங் செய்த படமாக மெர்சல் வந்துள்ளது, கண்டிப்பாக இதேபோல் வசூலிலும் சாதனை படைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Advertisement