அப்பா, மகனை மொத்தமாக பின்னுக்கு தள்ளிய விஜய்யின் மெர்சல் !

0
3238
Mersal

விஜய் நடித்து வெளியான படங்களிலேயே அவருடைய மிகச்சிறந்த வசூல் படம் என்றால் அது மெர்சல் தான். தீபாவளிக்கு வெளியாகி தற்போது வரை தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது மெர்சல்
mersalதுப்பாக்கி, கத்தி படங்களுக்கு அடுத்து ஒரு சமூக கருத்தோடு வெளிவந்த படம் கமர்சியலாகவும் ஹிட் ஆனது மெர்சல் படம். படம் திரையில் வெளியாவதற்கு முன்னால் பல எதிர்ப்புகளை கண்டாலும் அனைத்து பிரச்சனைகளையும் தாண்டி திரைக்கு வந்து மாஸ் செய்தது மெர்சல்.

இதையும் படிங்க: மெர்சல் மாஸ் கலெக்ஷன் ! வெளிநாடு வசூல் – துல்லியமான புள்ளிவிபரம் ?

- Advertisement -

தற்போது படத்தின் தெலுங்கு பதிப்பு ‘அதிரிந்தி’ கடந்த வாரம்
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியானது. அங்கும் படம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் வசூல் தென்னிந்திய ஸ்டார்களுடன் போட்டி போடும் அளவிற்கு வந்து விட்டது. தமிழ் மற்றும் தெலுங்கில் சேர்த்து ராம் சரண் நடித்த மகதீரா (மாவீரன்), மற்றும் அவரது அப்பா சிரஞ்சீவி நடித்த கைதி நெம்ப்ர 150 ஆகிய படங்களின் வசூலை பின்னுக்கு தள்ளியுள்ளார் விஜய்

மெர்சல் – விஜய் – தமிழ், தெலுங்கு – ₹.240 கோடி
கைதி நெம்பர் 150 – சிரஞ்சீவி – ₹.164 கோடி
மகதீரா – ராம் சரண் – ₹.150 கோடி

-விளம்பரம்-
Advertisement