மெர்சல் மாஸ் கலெக்ஷன் ! வெளிநாடு வசூல் – துல்லியமான புள்ளிவிபரம் ?

0
1144
mersal

மெர்சல் படம் வெளியாகி 25 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய் தனது 25 வருட சினிமா வாழ்க்கையில் இவரது போட்டியாளர் அஜித் பார்க்காத 200கோடி ரூபாய் வசூலை முதல் ஆளாக பார்த்து விட்டார். தமிழ் சினிமாவில் ரஜினி மட்டும பார்த்த 200 கோடி ரூபாய் வசூலை தற்போது சாதித்துள்ளார் விஜய்.
mersalஇதனால் செம்ம ஹேப்பியாக இருக்கும் விஜய் கையோடு அடுத்த படத்தின் வேலைகளை ஆரம்பித்துவிட்டார். வழக்கமாக வெளிநாடுகளில் வெளியாடும் தமிழ் படங்கள் அதிகபட்சம் 10 நாட்கள் தான் ஓடும். ஆனால், மெர்சல் இன்னும் வெளிநாடுகளின் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க: ஜோசப் விஜய், விஜய் ஆன்டனி, யாராக இருந்தாலும் சரி! விஜய்னு பேர் வச்சாலே இப்படி தான் !

மொத்தமாக சேர்த்து ₹.230.50 கோடி வசூல் செய்துள்ளது மெர்சல். தற்போது இதுவரை 26 நாட்களில் வெளிநாடுகளில் மட்டும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என பார்ப்போம் :

மலேசியா – ₹.18.31 கோடி
அரபு நாடுகள் – ₹.8.90 கோடி
அமெரிக்கா – ₹.8.80 கோடி
யூ.கே – ₹.4.81 கோடி
கனடா – ₹.3.03 கோடி
ஆஸ்திரேலியா – ₹.2.55 கோடி
ஃப்ரான்ஸ் – 32,038 என்ட்ரி
நார்வே – ₹.32 லட்சம்
நியூசிலாந்து – ₹.18 லட்சம்