கமலஹாசனின் ஆழ்வார்பேட்டை வீட்டிற்கு சென்னை மெட்ரோ நிர்வாகம் அனுப்பிய நோட்டீஸ் – பின்னணி இது தான்

0
407
kamal
- Advertisement -

உலக நாயகன் கமலஹாசனின் ஆழ்வார்பேட்டை வீட்டின் சில பகுதிகளை சென்னை மெட்ரோ நிர்வாகம் கைப்பற்ற நோட்டீஸ் அனுப்பி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் உலக நாயகனாக கலக்கிக் கொண்டிருப்பவர் கமலஹாசன். இவர் 1970 களிலேயே சினிமாவில் நடிக்கத் துவங்கி தற்போது இந்திய அளவில் மிக பிரபலமான நடிகராக வளர்ந்திருக்கிறார். இரண்டு வயதிலேயே சினிமாவுக்குள் வந்த கமல் 60 ஆண்டுகளாக சினிமா துறையில் நடித்து கொண்டு இருக்கிறார்.

-விளம்பரம்-
kamal

மேலும், இந்திய அளவில் ஐந்து மொழிகளில் நடித்து ஐந்து மொழிகளிலும் பிலிம்பேர் விருது வாங்கிய ஒரே நடிகர் கமல். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார். இயக்குனர் பாலச்சந்திரனால் நாயகனாக அறிமுகப் படுத்தப்பட்ட கமல் இன்று இந்தியாவில் உள்ள சிறந்த இயக்குனர்களுடன் பணியாற்றி வருகிறார். இவர் இதுவரை நான்கு தேசிய விருது நடிப்புக்காக பெற்றிருக்கிறார், தயாரிப்பாளராக ஒரு தேசிய விருதும் வாங்கி இருக்கிறார்.

- Advertisement -

இதையும் பாருங்க : திருமண வாழ்க்கை அந்த படம் மாதிரி இருக்கும்னு பாத்தா இந்த படம் மாதிரி இருக்கு – இந்தி டிவி ஷோவில் கேலி செய்த சமந்தா.

கமலின் சாதனை:

மேலும், 19 பிலிம்பேர் விருதும், தமிழக அரசு விருது, நந்தி விருது, அதுமட்டுமில்லாமல் உயரிய பல விருதுகளை வென்றிருக்கிறார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், நடன இயக்குனர், பாடகர், பாடலாசிரியர் என அனைத்து துறைகளிலுமே சிறந்து விளங்குகிறார். இவருடைய பல படங்கள் ஆஸ்கர் விருதுக்கும் அனுப்பப்பட்டு இருக்கிறது. மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் படம் வெளியாகி இருக்கிறது .

-விளம்பரம்-
kamal

விக்ரம் படம்:

இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து ராஜ்கமல் ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். அனைவரும் எதிர்பார்த்திருந்த கமலின் விக்ரம் படம் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருப்பதால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி இருக்கிறார்கள். மேலும், இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது.

மெட்ரோ நிர்வாகம் அனுப்பிய நோட்டீஸ்:

இந்த நிலையில் கமலஹாசனின் ஆழ்வார்பேட்டை வீட்டின் சில பகுதிகளை சென்னை மெட்ரோ நிர்வாகம் கைப்பற்றயிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சென்னையில் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரை இடையே 26.1 கிலோமீட்டர் புதிய மெட்ரோ பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஆழ்வார்பேட்டை ரயில் நிலையம் அமைக்கும் கட்டுமான பணி நடைபெற இருப்பதால் இந்த கட்டுமான பணிக்கு கமலஹாசனுக்கு சொந்தமான வீட்டின் 170 சதுர அடி நிலம் தேவைப்படுகிறது.

விஜயகாந்தின் இடம் கைப்பற்றப்பட்டது:

அந்த நிலத்தை கைப்பற்றுவதற்கு மெட்ரோ நிறுவனம் சார்பில் கமலஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. கடந்த முறை மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் போது விஜயகாந்தின் திருமண மண்டபத்தில் சில பகுதிகள் கைப்பற்றப்பட்டன. தற்போது கமலஹாசனுக்கு சொந்தமான அவருடைய குடும்பத்தின் பாரம்பரியமான வீட்டின் ஒரு பகுதியை மெட்ரோ நிர்வாகம் கைப்பற்ற நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இதற்கு கமல் தரப்பிலிருந்து என்ன பதில்? கூறப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement