சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் பார்த்து ரசித்து மகிழ்ந்த சீரியல் என்றால் அது மெட்டி ஒலி தான். அதிலும் ‘அம்மி அம்மி அம்மி மிதித்து’ என்ற பாடல் இன்றளவும் மக்கள் மத்தியில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றது. 2002 ஆம் ஆண்டு சன் டிவியில் தான் ஒளிபரப்பப்பட்டது. இந்த சீரியலை திருமுருகன் அவர்கள் இயக்கினார். இந்த சீரியலில் டெல்லி குமார், காவேரி, காயத்திரி, வனஜா, உமா, ரேகா, சேத்தன், நீலிமா ராணி,போஸ் வெங்கட் மற்றும் திருமுருகன் போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளார். ஆண்டுகள் பல கடந்தாலும் தற்போது வரை மக்கள் மெட்டி ஒலி சீரியலை பற்றி பேசிக் கொண்டு தான் உள்ளார்கள்.
ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்ற தந்தையும் அவரது குடும்பமும் அதற்குள் நடக்கும் நிகழ்வுகளையும் மையமாக வைத்து தான் மெட்டி ஒலி. இந்த சீரியல் கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேல் ஒளிபரப்பாகி இருந்தது. இந்த சீரியல் பட்டி தொட்டி எல்லாம் ஹிட்டானது. மெட்டி ஒலி சீரியலில் நடித்த நடிகர்கள் எல்லோருமே மிகப் பெரிய அளவில் பிரபலமானர் என்று சொல்லலாம். இந்த சீரியலை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறக்க மாட்டார்கள்.
அந்த வகையில் இந்த சீரியலில் ‘சரோ’ என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த காயத்ரியை யாராலும் மறக்க முடியாது. சுரேஷ் மேனன் இயக்கிய ‘பாசமலர்’ படத்தில் தான் காயத்ரி முதன் முதலாக தமிழ் சினிமாவில் காயத்ரி அறிமுகமானார். அதன் பின்னர் இவர் அஜித்துக்கே ஜோடியாக நடித்துள்ளார். அதுவும் தல – தளபதி இணைந்து நடித்த ‘ராஜ பார்வை’ படத்தில் அஜித்தின் காதலியாக நடித்து இருந்தார்.
சீரியல்ல காயத்திரி பிசியாக நடித்து இருக்கும் போது இவங்களுக்கு கல்யாணம் ஆனது. இவருடைய கணவர் ரவி. இவர் சின்னத்திரை இயக்குனர். அதாவது பல சீரியல்களை இயக்கி உள்ளார். கல்யாணம் ஆன பிறகு இவங்க ஜீ தமிழ்லில் ‘நெஞ்சை கிள்ளாதே’ சீரியல் காயத்திற்கு தற்போது ரோஜா சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். சமீபத்தில் தனது மகளுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் காயத்ரி.