மெட்டி ஒலி சீரியல் புகழ் டான்சருக்கு இவ்ளோ பெரிய மகன் மற்றும் மகளா – வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்.

0
1279
shanthi
- Advertisement -

சன் டிவியில் ஒளிபரப்பாக்கி வெற்றிகரமாக முடிவடைந்த மெட்டி ஒலி சீரியலில் ‘அம்மி அம்மி அம்மி மிதித்து’ என்ற பாடலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் டான்சர் சாந்தி. பதிமூன்று வயதில் கிழக்கு வாசல் படத்தில் குரூப் டான்ஸராக சினிமா உலகிற்கு அறிமுகமானவர் சாந்தி. பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் மூவாயிரம் பாடலுக்கும் நடனமாடியிருக்கிறார். அதோடு பல மொழிகளில் 500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்து இருக்கிறார். இவர் ரஜினி, விஜய், அஜித் என பல ஹீரோக்கள் படங்களில் நடனம் ஆடி இருக்கிறார்.

-விளம்பரம்-
Shanthi Age, Height, Weight, Body, Wife or Husband, Caste, Religion, Net  Worth, Assets, Salary, Family, Affairs, Wiki, Biography, Movies, Shows,  Photos, Videos and More

இப்படி இவர் பல படங்களில், பிரபல நடிகர்களுடன் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்து இருந்தாலும் இவரை பிரபலமாக்கியது 2002 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் தான். அந்த சீரியலில் வரும் அம்மி அம்மி அம்மி மிதித்து டைட்டில் சாங் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் சீக்கிரமாக பிரபலமானர். இந்த சீரியலை பார்ப்பவர்களை விட மெட்டி ஒலி சீரியலின் டைட்டில் பாடலுக்காகவே பார்க்கும் கூட்டம் இருந்தது.

- Advertisement -

திருமண வாழ்க்கை :

அம்மி அம்மி அம்மி மிதித்து என்ற பாடல் மூலம் இல்லத்தரசிகள் மனதை கொள்ளை அடித்தவர் நடன இயக்குனர் சாந்தி. மேலும், மெட்டி ஒலி சீரியல் பிறக்கு இவர் எந்த சீரியலிலும் நடனம் ஆடவில்லை. இந்த சீரியலுக்கு பிறகு இவருக்கு எந்த சீரியலிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்னர் சாந்தி திருமணத்திற்கு பிறகு கொஞ்சம் எடுத்துக் கொண்டார். தற்போது மீண்டும் சீரியலில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

சாந்தி ரீ – என்ட்ரி :

சமீபத்தில் கூட சித்தி 2 சீரியலுக்கு சாந்தி அவர்கள் தான் நடனமாட போகிறார் என்று கூறப்பட்டது. ஆனால், மக்கள் மத்தியில் சித்தி சீரியலை பிரபலமடைய செய்தது கண்ணின் மணி பாடல் தான். அதனாலே இந்த பாடலை அப்படியே வைத்து விட்டார்கள். இந்த சிரியல் மூலம் சாந்தி ஒரு ரவுன்டு கட்டி இருப்பார் என்று எதிரிபார்த்தது.

-விளம்பரம்-

தற்போது நடித்து வரும் தொடர்கள் :

தற்போது டான்ஸ் சாந்தி சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடிகையாக அசத்திக் கொண்டு வருகிறார். சினிமாவில் அறிமுகமாகி பல கஷ்டங்களை அனுபவித்து தான் இவர் தற்போது டான்ஸ் மாஸ்டர் ஆக உயர்ந்து இருக்கிறார். தற்போது பல ஆண்டுகளுக்கு பின்னர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே தொடரில் நடித்து வருகிறார். மேலும், விஜய் டிவியில் முத்தழகு தொடரிலும் நடித்து வருகிறார்.

அரவிந்த் சாமிக்கு வில்லி :

அதே போல கடந்த சில ஆண்டுக்கு முன் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சாந்தி, அரவிந்த் சாமிக்கு வில்லியாக நடித்து வருவதாக கூறி இருந்தார். செல்வா இயக்கத்தில் அரவிந்த் சாமி நடிப்பில் புது படம் ஒன்று உருவாகி வருகிறது. இந்த படத்தில் அரவிந்த் சுவாமிக்கு வில்லி கதாபாத்திரத்தில் மெட்டி ஒலி சாந்தி நடித்து வருகிறார் என்ற தகவல் அதிகாரப் பூர்வமாக வெளியாகி இருந்தது. ஆனால், இந்த படம் என்ன ஆனது என்று தெரியவில்லை.

Advertisement