மெட்டி ஒலியின் ‘அம்மி அம்மி அம்மி மிதித்து’ என்ற பாடலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் டான்சர் சாந்தி. இந்த சீரியலை பார்ப்பவர்களை விட மெட்டிஒலி சீரியலின் பாடலுக்காகவே பார்க்கும் கூட்டம் இருந்தது. அம்மி அம்மி அம்மி மிதித்து என்ற பாடல் மூலம் இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடன இயக்குனர் சாந்தி. மெட்டி ஒலி சீரியல் பிறக்கு இவர் எந்த சீரியலிலும் நடனம் ஆடவில்லை. தற்போது தான் சாந்தி அவர்கள் சித்தி 2 சீரியலுக்கு நடனமாட போகிறார் என்ற தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் சாந்தி தன் வாழ்க்கையில் சந்தித்த மிக மோசமான அனுபவத்தை பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறியது, நான் பதிமூன்று வயதில் இருக்கும் போதே டான்ஸ் ஆட வந்துவிட்டேன். கிழக்கு வாசல் படத்தில் குரூப்பில் சேர்ந்து ஆடினேன். அப்போது தான் என்னுடைய சினிமா பயணம் தொடங்கியது. நான் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடனமாடிக் இருக்கிறேன். இதுவரை மூவாயிரம் பாடல்கள் டான்ஸ் நடனம் ஆடி இருக்கிறேன். ஒரு கட்டத்தில் படங்களுக்கு டான்ஸ் மாஸ்டர் ஆகும் நிலைக்குக் கூட நான் உயர்ந்து இருக்கிறேன். ரஜினி, விஜய், அஜித் என பல ஹீரோக்கள் படங்களில் நடனம் ஆடி இருக்கிறேன். ஆனால், எனக்கு இப்போது வரை மக்கள் மத்தியில் பிரபலமடைய செய்தது மெட்டி ஒலி சாந்தி தான். அந்த பாட்டுக்கு முதல் முதலில் என்னை ஆட சொல்லும் போது சீரியலுக்கு போறதா? என்று யோசித்தேன்.
இதையும் பாருங்க : விவேக் வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடல் – வெளியான உருக்கமான புகைப்படம். (இவர் முகமா இது நம்பவே முடியலயே)
தெலுங்கு சினிமாவில் நான் ஒரு மோசமான அனுபவத்தை சந்தித்தேன். அங்கு சூப்பர் ஸ்டாராக இருந்த நடிகரிடம் ஒருமுறை வாய்ப்புக்காக அவரை சந்தித்தேன். அப்போது எனக்கு மிகப்பெரிய அவமானம் நடந்தது. அந்த நடிகரால் தான் நான் இன்னமும் டான்ஸ் ஆட யோசிக்கிறேன். அதுமட்டுமில்லாமல் இனி எங்கேயும் போய் நிற்கக் கூடாது என்று அந்த நடிகரால் தான் நான் முடிவு எடுத்தேன். அதற்குப் பின் எனக்கு கிடைத்த வாய்ப்பு எல்லாம் தானாக அமைந்தது. ஒரு லேடி டான்ஸர் சினிமாவில் சாதிக்க வேண்டுமென்றால் நிறைய விஷயங்களை இழக்க வேண்டி இருக்கிறது. எல்லாத்தையும் கடந்து தான் நான் இந்த அளவிற்கு வந்துள்ளேன்.
தற்போது அர்விந்த் சாமி அவர்கள் நடிக்கும் படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அந்த படம் கூடிய விரைவில் ரிலீசாகும். மீண்டும் நான் டிவியில் நடிகையாகவும், டான்ஸராகவும் வலம் வந்து கொண்டிருக்கின்றேன். சினிமாவில் நான் எதிர்பார்த்த உயரத்திற்கு வரவில்லை என்றாலும் மக்கள் மத்தியில் இடம் பிடித்திருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்று கூறினார்.