சிங்கம் படத்தின் என்னை ஏமாற்றி நடிக்க வைத்தார்கள், என் கணவர் தான் காரணம் – மெட்டி ஒலி வனஜா சொன்ன ஷாக்கிங் உண்மை.

0
1058
vanaja
- Advertisement -

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் பார்த்து ரசித்து மகிழ்ந்த சீரியல் என்றால் அது மெட்டி ஒலி தான். அதிலும் ‘அம்மி அம்மி அம்மி மிதித்து’ என்ற பாடல் இன்றளவும் மக்கள் மத்தியில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றது. 2002 ஆம் ஆண்டு சன் டிவியில் தான் ஒளிபரப்பப்பட்டது. இந்த சீரியலை திருமுருகன் அவர்கள் இயக்கினார். இந்த சீரியலில் டெல்லி குமார், காவேரி, காயத்திரி, வனஜா, உமா, ரேகா, சேத்தன், நீலிமா ராணி,போஸ் வெங்கட் மற்றும் திருமுருகன் போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளார். ஆண்டுகள் பல கடந்தாலும் தற்போது வரை மக்கள் மெட்டி ஒலி சீரியலை பற்றி பேசிக் கொண்டு தான் உள்ளார்கள்.

-விளம்பரம்-

ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்ற தந்தையும் அவரது குடும்பமும் அதற்குள் நடக்கும் நிகழ்வுகளையும் மையமாக வைத்து தான் மெட்டி ஒலி. இந்த சீரியல் கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேல் ஒளிபரப்பாகி இருந்தது. இந்த சீரியல் பட்டி தொட்டி எல்லாம் ஹிட்டானது. மெட்டி ஒலி சீரியலில் நடித்த நடிகர்கள் எல்லோருமே மிகப் பெரிய அளவில் பிரபலமானர் என்று சொல்லலாம். இந்த சீரியலை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறக்க மாட்டார்கள்.

- Advertisement -

இதையும் பாருங்க : அன்று விஜய்யை கலாய்த்துவிட்டு இன்று அவர் பட டைட்டிலேயே வைத்த கோமாளி இயக்குனர் – திட்டி தீர்க்கும் விஜய் ரசிகர்கள்.

மெட்டி ஒலியில் லீலா :

இந்த தொடரில் விஜி மற்றும் லீலா என்ற கதாபத்திரத்தில் அக்கா தங்கையாக நடித்த உமா மற்றும் வனஜா இருவரும் நிஜத்திலும் அக்கா தங்கைகள் தான். இதில் வனஜா, விஜய் தொலைக்காட்சியில் மூலமாகத் தான் இவர் சின்னத் திரைக்கு அறிமுகமானார். அதன்பின் பல சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதுமட்டுமில்லாமல் படங்களிலும் சின்ன சின்ன கதாபாத்திரங்களிலும் வனஜா நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

சிங்கம் படத்தில் விலைமாது :

அந்த வகையில் இவர் சிங்கம் படத்தில் ஒரு விலை மாது கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். சீரியல் மற்றும் சினிமாக்களில் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்த இவர் இந்த படத்தில் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்தது இல்லத்தரசிகளை முகம் சுழிக்க வைத்தது. இப்படி ஒரு நிலையில் அந்த கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார் நடிகை வனஜா.

படத்தில் நடிக்க காரணம் :

இதுகுறித்து பேசிய அவர் ‘அந்த படத்தில் ஏன்டா நடித்தோம்னு இருக்கும். அந்த படத்தை பார்த்துவிட்டு பலரும் ஏன் உனக்கு இந்த வேலை என்றெல்லாம் கேட்டார்கள். அந்த படத்தில் நான் நடிக்க காரணம் ஹரி சார் தான். அப்போது அவரிடம் என் கணவர் உதவி இயக்குனராக இருந்தார். அப்போது எனக்கு கல்யாணம் எல்லாம் ஆகவில்லை. நான் ஷூட்டிஙக்கு போகும் போது என்னை பான் பராக் எல்லாம் போட சொன்னார்கள். ஆனால், நான் மறுத்துவிட்டேன்’

சமாதானம் செய்த அப்பா :

அப்போது என் அப்பா தான் என்னை சமாதானம் செய்தார். மேலும், அந்த படத்தில் புடவை எல்லாம் கழட்ட சொன்னார்கள். ஆனால், நான் முடியாது என்று மறுத்துவிட்டேன். பின்னர் எப்படியே நான் அந்த காட்சியில் நடித்து முடித்துவிட்டேன். அந்த படத்தின் முதல் நாளே எனக்கும் என் கணவருக்கும் பெரிய சண்டையே வந்தது. இருந்தாலும் நான் மெட்டி ஒலிக்கு பின்னர் நான் அதிகம் ரீச் ஆனது அந்த படம் மூலம் தான் என்று கூறியுள்ளார்.

Advertisement