நடிகர் சத்யராஜ் புரட்சி கலைஞர் எம் ஜி ஆர் அவர்களின் தீவிர ரசிகர் என்பது தெரியும். எம் ஜி ஆர் இறந்த பின்னரும் அவரது தீவிர ரசிகராகவே தொடர்ந்தார் சத்யராஜ். படங்களில் கூட பல எம் ஜி ஆர் ரெபரன்ஸை வைத்துவிடுவார். அவர் கொடுத்த கர்லா கட்டையை தற்போதும் பொக்கீஷமாக பார்த்து வருகிறார் சத்தியராஜ். இப்படி எம் ஜி ஆரின் தீவிர பக்கதனாக இருந்த சத்யராஜின் படத்தை தான் எம் ஜி ஆர் இறுதியாக பார்த்தார் என்ற பெருமை சத்யராஜுக்கு உண்டு.

வேதம் புதிது தமிழ் திரை 1987 எம்.ஜி.ஆர்., இறப்பதற்கு முன் பார்த்த கடைசி படம் என்ற பெருமையும், வேதம் புதிதுக்கு உண்டு.
படத்தின் ஷூட்டிங் முடிந்து வெளியாகத் தயாராக இருந்த நேரம் அது. படத்தைப் பார்த்த மத்திய தணிக்கைக் குழுவினர், படத்தை பற்றி எந்த காரணமும் சொல்லவில்லையாம். ஆனால், படத்தையே வெளியிட முடியாது என்று கை விரித்திருக்கிறார்கள்.

Advertisement

என்ன செய்வது என்று தெரியாமல் இயக்குநர் பாரதிராஜாவும் படக்குழுவும் திகைத்து நின்றிருந்த நேரத்தில், அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரிடம் இருந்து போன் வந்திருக்கிறது. பாரதிராஜாவிடம், உங்களுடைய படத்துக்கு ஏதோ பிரச்னையாமே’ என்று அக்கறையாக விசாரித்திருக்கிறார்.

அத்தோடுஉங்கள் படத்தைப் பார்க்க வேண்டும். உடனே ஏற்பாடு செய்யுங்கள்’ என்று உரிமையோடு சொல்லியிருக்கிறார்.ஏ.வி.எம் தியேட்டரில் சத்யராஜைத் தனது அருகில் அமரவைத்துக் கொண்டு படம் முழுவதையும் பார்த்த எம்.ஜி.ஆர், படக்குழுவை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்.

Advertisement

அத்தோடு, காபி, டீ, பலகாரம் என தனது வீட்டில் இருந்து அனைவருக்கும் ஏற்பாடு செய்திருந்தாராம் எம்.ஜி.ஆர். படம் முடிந்ததும், சத்யராஜின் கையை முத்தமிட்டு பாராட்டியிருக்கிறார் எம்.ஜி.ஆர். அத்தோடு பாரதிராஜாவிடம், `ரிலீஸ் தேதியை நீ அறிவித்து விடு; படம் ரிலீஸாகும்’ என்று கூறிவிட்டுச் சென்றிருக்கிறார்.

Advertisement

அதன்பிறகு 1987 டிசம்பர் 24-ல் எம்.ஜி.ஆர் உயிரிழந்தார்.எம்.ஜி.ஆர் கடைசியாகப் பார்த்த திரைப்படம் என்று வேதம் புதிது கருதப்படுகிறது. அவர் மறைந்து மூன்று நாட்களுக்குப் பின்னர் டிசம்பர் 27-ல் வேதம்புதிது படம் ரிலீஸானது. பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டடித்தது. எத்தனை மசாலா படங்கள் வந்தாலும், வசூல் குவித்தாலும், காலம் கடந்து நிற்பது, தரமான படங்களே. அவ்வரிசையில் வேதம் புதிது

Advertisement