தனது சொந்த நாட்டில் ஏற்பட்ட வெடி விபத்து – தனது ட்ரேட் மார்க் கண்ணாடியை ஏலத்துக்கு விட்ட மியா – எத்தனை லட்சம் தெரியுமா ?

0
1439
mia
- Advertisement -

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் நாட்டின் தலைநகரமான பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்த அதிபயங்கர வெடி விபத்து மொத்த நாட்டையும் நிலைகுலையச் செய்தது. பெய்ரூட்டில் உள்ள ஒரு துறைமுகத்தில் ஒரு பகுதியில் திடீரென பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் துறைமுகத்தில் இருந்த கிடங்கில் வைக்கப்பட்டிருந்த வேதிப்பொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

-விளம்பரம்-

இந்தக் கோர விபத்தில் சிக்கி இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 4,000-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது. பெய்ரூட் துறைமுக கிடங்கில் கடந்த 6 ஆண்டுகளாக சேமித்து வைக்கப்பட்டிருந்த ஆபத்து தரக்கூடிய வேதிப்பொருள் வெடித்ததால் இந்தக் கோர விபத்து நடந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

- Advertisement -

பெய்ரூட்டின் கோர சம்பத்திற்கு பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் லெபனானை பூர்வீகமாக கொண்ட ஆபாசப்பட முன்னாள் நடிகை மியா காலிஃபா, வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக தனது அடையாளங்களில் ஒன்றாக கண் கண்ணாடியை ஏலத்தில் விட்டுள்ளார். அதன் மூலம் கிடைக்கும் பணத்தை  வெடி விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்விற்காகக் கொடுக்க இருக்கிறார்.

அவர் ஏலத்தை அறிவித்ததிலிருந்து மியாவின் கண் கண்ணாடியை வாங்குவதற்கு அதிகமான போட்டி நிலவுகிறது. தற்போது வரை கண்ணாடியை வாங்குவதற்கான தொகை ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது. இந்த தொகையானது இன்னும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்திய மதிப்பில் தற்போது அந்த கண்ணாடியின் விலை 7 லட்சம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

-விளம்பரம்-
Advertisement