உலகம் முழுவதும் புகழ்பெற்ற நபர்களில் ஒருவர் மைக்கல் ஜாக்சன். இவரை தி கிங் ஆப் பாப், மூன் வாக்கர் என்று ரசிகர்களால் பிரபலமாக அறியப்பட்டவர். பாடுவது என்பதை தாண்டி, தனக்கான ஒரு தனி நடனத்தை உருவாக்கிக் கொண்டு உலகெங்கிலும் தனக்கான தனி அடையாளத்தை உருவாக்கியவர் மைக்கேல் ஜாக்சன். உலக மக்களை தன்னுடைய பாப் இசை ஆளும், நளினமான நடன அசைவுகளாலும் மயங்க வைத்த பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன்.

அதோடு குக்கிராமத்தில் கூட ஒரு சிறுவன் நன்றாக நடனம் ஆடினால் ‘குட்டி மைக்கேல் ஜாக்ஸன் ’ என்று தான் அழைப்பார்கள். அந்த அளவுக்கு அவரது புகழ் உலக முழுவதும் பரவியிருந்தது. இளம் வயதிலேயே இசையின் மீதும், நடனம் மீதும் அதிக நாட்டம் கொண்டிருந்தவர் ஜாக்சன். 11வது வயதிலேயே தன் சகோதரர்களுடன் இணைந்து ‘தி ஜாக்சன் 5’ என்ற இசை நிகழ்ச்சி மூலம் தன்னுடைய பாப் இசையை தொடங்கினார்.

Advertisement

மைக்கேல் ஜாக்சன் குறித்த தகவல்:

மேலும், பாடல் எழுதுவது, அதற்கு இசையமைப்பது, பாடலுக்கு ஏற்றாற் போல் நடனம் ஆடுவது, இடை இடையே கொஞ்சம் நவரச நடிப்பு என அனைத்து திறமையையும் கலந்து ‘பாப்’ என்ற புதிய உலகை மைக்கல் ஜாக்சன் படைத்தார். மக்களின் மத்தியில் 40 ஆண்டு காலமாக புகழ் பெற்றவராக வாழ்ந்து வந்தார் மைக்கல் ஜாக்சன். 2009 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தனது வீட்டில் மாரடைப்பு காரணமாக மைக்கேல் ஜாக்சன் இறந்துவிட்டார் என்று அறிவித்தார்கள். ஆனால், தற்போது வரை இவருடைய இறப்பு மர்மமாக இருக்கிறது.

மைக்கேல் ஜாக்சன் உடன் தமிழ் பெண்:

இவருடைய நடனத்திற்கு உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். அவர் இல்லை என்றாலும் அவர் புகழ் இன்னும் மக்கள் மத்தியில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் மைக்கேல் ஜாக்சன் உடன் தமிழ் பெண் ஒருவர் நடனமாடி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 1991 ஆம் ஆண்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மைக்கேல் ஜாக்சன் உடன் தமிழ் பெண் ஒருவர் நடனம் ஆடி இருக்கிறார். அவருடைய பெயர் யமுனா சங்கர சிவம்.

Advertisement

யமுனா குறித்த தகவல்:

இவர் வட இலங்கை பகுதியில் பிறந்தவர். அங்கே தான் வளர்ந்தார். தன்னுடைய தொடக்கப்பள்ளி, உயர்நிலைக் கல்வி அனைத்தையும் கொழும்புவில் படித்தார். பின் இவர் தன்னுடைய பல்கலைக்கழக படிப்பை அமெரிக்காவில் படித்தார். அங்கு இவர் படித்துக் கொண்டிருக்கும் போது தான் மைக்கேல் ஜாக்சன் மூலமாக ஒரு அரிய வாய்ப்பு வந்தது. அதாவது 1991 ஆம் ஆண்டில் பிளாக் அண்ட் வைட் என்ற நிகழ்ச்சியை நடத்த மைக்கேல் ஜாக்சன் திட்டம் போட்டார். இதில் நடிப்பதற்கும் நடனம் ஆடுவதற்கும் கலைஞர் தேவை என்று பத்திரிகையில் மைக்கல் ஜாக்சன் விளம்பரமும் செய்திருந்தார்.

Advertisement

யமுனாவின் தற்போதைய நிலை:

இதைப் பார்த்த பல்லாயிரக்கணக்கான பேர் விண்ணப்பம் செய்திருந்தார்கள். இதில் 3000 பேர் நேர்முகத் தேர்வில் அழைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் தான் யமுனா. பின் போட்டியில் யமுனா தேர்வு செய்யப்பட்டார். இவருடைய நாட்டிய நடினங்கள் பார்வையாளர்களை மட்டுமல்ல நடுவர்களையும் கவர்ந்திருந்தது. மேலும், இந்த நிகழ்ச்சியில் மைக்கேல் ஜாக்சன் உடன் யமுனாவும் ஒடிசி நடனம் ஆடி இருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது யமுனாவுக்கு 55 வயது. வயது மூப்பின் காரணமாக இவர் நடனம் ஆடுவதிலிருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொண்டார்.

Advertisement