விஜய்க்கு இது நல்லது கிடையாது…!படக்குழுவிற்கு எச்சரிக்கை விடுத்த அமைச்கர்..!

0
290

மெர்சல் படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்து வெளிவந்துள்ள படம் சர்கார் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தப் படத்தில், விஜய் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர்.

Kadambur-raju

இந்நிலையில் சர்கார் படத்தில் அரசியல் நோக்கத்திற்காக சில காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் உள்ளதாக அரசுக்கு தகவல் வந்துள்ளது. படத்தில் அரசின் விலையில்லா பொருட்கள் எரிப்பது போல சில காட்சிகள் உள்ளது அந்த காட்சிகளை அவர்களாகவே நீக்கிவிட்டால் நல்லது.

அரசியல் உள்நோக்கத்துடன் சில காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. வளர்ந்து வரும் நடிகர் விஜய்க்கு இது நல்லது கிடையாது. சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து முதலமைச்சருடன் ஆலோசிக்கப்படும். அரசியல் உள்நோக்கத்துடன் சில காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. காட்சிகளை நீக்கவில்லை என்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்போம் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் பல்வேறு அரசியல் காட்சிகளை பற்றி பேசியதால், அந்த படத்திற்கு பா ஜா க கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அதன் பின்னர் அந்த படம் பலராலும் பேசப்பட்டு மேலும் வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.