நடிகர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் குடியரசுத் தலைவர், பிரதமர், மாநில ஆளுநர்கள், அமைச்சர்கள், முக்கியமான நபர்கள் என பலருக்குமே பலவிதமான பிரிவுகளில் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சினிமா பிரபலங்களும், தொழிலதிபர்களுக்கும் இந்த பிரிவுகள் அடங்கும். ஆனால், அது அவர்களின் பதவி மற்றும் அச்சுறுத்தலின் தன்மையை பொறுத்து மாறுகிறது.

நாட்டினுடைய குடியரசுத் தலைவருக்கு பாதுகாப்பு அளிப்பதை 108 வீரர்களைக் கொண்ட மெய்க்காவலர் படை. இந்தியாவில் உள்ள முக்கிய முக்கியமான படை என்றால் அது எஸ்பிஜி எனப்படும் ஸ்பெஷல் ப்ரொடக்ஷன் குரூப் தான். எஸ்பிஜிக்கு அடுத்தபடியாக z+ பாதுகாப்பு பிரிவு. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு இந்த இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு தான். ஐந்துக்கும் மேற்பட்ட குண்டு துளைக்காத வாகனங்களுடன் 50-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு வழங்கும். இந்த குழுவிற்கு மாதம் தோறும் 33 லட்சம் வரை செலவிடப்படுகிறது.
இந்தியாவின் பாதுகாப்பு பிரிவு:
அதை அடுத்து 22 பேர் பாதுகாப்பு அளிக்கும் பிரிவினருக்கு பெயர் z பிரிவு .உயிருக்கு ஆபத்து இருக்கும் விஐபிகளுக்கு உளவுத்துறை இந்த பிரிவை பரிந்துரை செய்யப்படும். தமிழ்நாட்டின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு இந்த z பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த பிரிவினருக்கு மாதம் 16 லட்சம் செலவழிக்கப்படுகிறது. இதற்கு அடுத்த இடத்தில் y+ பாதுகாப்பு பிரிவு இருக்கிறது. சல்மான் கான், கங்கனா, ஷாருக்கான் போன்றோருக்கு இந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த பாதுகாப்பு படைக்காக மாதம் 15 லட்சம் செலவழிக்கப்படுகிறது.
விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு:
இதற்கு அடுத்து தான் ஒய் பிரிவு பாதுகாப்பு வருகிறது. அதற்போது இந்த ஒய் பிரிவு பாதுகாப்பு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த பிரிவில் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த ஒன்று அல்லது இரண்டு வீரர்கள் உட்பட எட்டு காவலர்கள் இருப்பார்கள். இந்த பிரிவுக்கு மாதம் 12 லட்சம் ரூபாய் வரை செலவிடப்படுகிறது. நடிகர் விஜய்க்கு இந்த பாதுகாப்பு தமிழ்நாட்டில் மட்டும் தான் வழங்கப்படும். இந்த பாதுகாப்பு கொடுப்பதற்கு காரணம், விஜய் மீது முட்டை அடிக்க வேண்டும் என்று சில செய்திகள் சோசியல் மீடியாவில் வந்தது.
ஒய் பிரிவு வழங்க காரணம்:
அந்த அச்சுறுத்ததால் தான் மத்திய உள்துறை அமைச்சகம் அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டிருக்கிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் மத்தியில் தந்திருக்கின்றது. தற்போது ஜனநாயகன் என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். இது தான் இவரின் கடைசி படம். இது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தாலும் இவர் அரசியலுக்கு வருவது சந்தோசத்தை கொடுத்து இருக்கிறது. இதை அடுத்து விஜய் அவர்கள் முழு நேர அரசியலில் ஈடுபட இருக்கிறார்.
விஜய் அரசியல்:
இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று தன்னுடைய கட்சியின் பெயரை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து அரசியல் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். மேலும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் இவர் தன்னுடைய முதல் மாநாட்டை பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் நடத்தி இருந்தார். இதை பார்த்து பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டி இருந்தார்கள். அதோடு வருகிற 2026 ஆம் ஆண்டில் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் விஜய் அறிவித்து இருந்தார். இப்படி நாளுக்கு நாள் விஜய்யின் அரசியல் பயணம் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.