பிரபல நடிகையின் தம்பி, சுகன்யா படத்தில் ஹீரோ, தற்போது சன் டிவி சீரியல் நடிகர் – மின்சாரக் கண்ணா பட நடிகரா இது?

0
765
MinsarA
- Advertisement -

மின்சாரக் கண்ணா படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடித்த நடிகர் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளிவந்த படம் மின்சார கண்ணா.

-விளம்பரம்-

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான படம் தான் மின்சார கண்ணா. இந்த படத்தில் குஷ்பூ, ரம்பா, மணிவண்ணன், மன்சூர் அலிகான், மோனிக்கா, கரண் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால், கே டிவியில் இந்த படம் ஓடி மக்கள் மத்தியில் பிரபலமானது. மேலும், இந்த படத்தில் விஜயின் அண்ணனாக கூர்கா வேடத்தில் நடித்த நடிகர் சந்திரகாந்த். மேலும், இவர் சுகன்யாவுடன் அன்று கண்ட முகம் என்ற படத்தில் நடித்து இருந்தார்.

- Advertisement -

மின்சார கண்ணா நடிகர்:

இவர் இந்த படத்தில் பார்க்க செகண்ட் ஹீரோ போல் மாஸாகவும், காமெடி வேடத்திலும் கலக்கி இருந்தார். இந்த படத்திற்கு பிறகு இவர் என்ன ஆனார்? என்று தெரியவில்லை. இந்நிலையில் தற்போது இவரை குறித்த தகவல் தான் வெளியாகி இருக்கிறது. இவருடைய உண்மையான பெயர் சந்திரகாந்த். இவர் நடிகை ஸ்ரீபிரியாவின் தம்பி ஆவார். தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீபிரியா.

சந்திரகாந்த் குறித்த தகவல்:

சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கிய உடன் இவர் சின்னத்திரை தொடர்களிலும் நடித்திருந்தார். தற்போது இவர் நடிப்பில் இருந்து விலகி இருக்கிறார். மேலும், இவருடைய தம்பி சந்திரகாந்த் அவர்கள் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமாகி இருந்தார். அதற்கு பின் இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் கனகா நடித்த ஒரு படத்தில் கதாநாயகனாகவும் சந்திரகாந்த் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

சந்திரகாந்த் நடித்த படங்கள்:

மேலும், இவர் கமல் நடிப்பில் வெளியாகிசூப்பர் ஹிட் கொடுத்த இந்தியன் படத்தில் நெடுமுடி வேணு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின் இவர் விஜயின் நடிப்பில் வந்த மின்சார கண்ணா படத்தில் விஜயின் அண்ணனாக நடித்திருந்தார். அதற்குப் பிறகு இவர் என்ன ஆனார்? என்று தெரியவில்லை. தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப் பெண்ணே என்ற தொடரில் நடித்து வருகிறார். தன்னுடைய குடும்ப சூழ்நிலைக்காக கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து கார்மெண்ட்ஸ்சில் வேலைக்கு செல்கிறார் ஆனந்தி.

சிங்கப்பெண்ணே சீரியல்:

இவருடன் சில பெண்களும் வேலை செய்கிறார்கள். அங்கு அவர்கள் தைரியமாக எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக வைத்து தான் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. இதில் வில்லனாக சந்திரகாந்த் நடிக்கிறார். விஜய் படத்தில் மாஸாக இருந்த இவர் இந்த சீரியலில் பார்க்க வயதானவர் போல் இருக்கிறார். மேலும், இந்த வாரம் வெளியான டிஆர்பி ரேட்டிங்கிலேயே சிங்கப்பெண்ணே தொடர் தான் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

Advertisement