ஆளவந்தான் படத்தில் கமலுடன் நடித்துள்ள மிர்ச்சி சிவா. எந்த கட்சியில்னு நீங்களே பாருங்க.

0
111904
Mirchisiva
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் மிர்ச்சி சிவா. இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன் ரேடியோ மிர்ச்சியில் வானொலி அறிவிப்பாளராக பணியாற்றினார். இவர் 1988ஆம் ஆண்டு உடுமலைபேட்டையில் பிறந்தவர். சிவா பத்தாம் வகுப்பு வரை தான் படித்து உள்ளார். அதன் பின்னர் சென்னை வந்து சின்ன சின்ன நாடகங்களில் கலந்து கொண்டு தனது நடிப்பு திறமையை வளர்த்தி கொண்டார். சிவா என்று சொன்னவுடன் அனைவருக்கும் அவருடைய நடனம் தான் நியாபகத்திற்கு வரும். இந்த ரேடியோ ஜாக்கி வேலையை பார்த்துக் கொண்டே படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தார் சிவா. 2001 ஆம் ஆண்டு ஷாம் நடிப்பில் வெளிவந்த 12B என்னும் படத்தின் மூலம் தான் சிவா சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் விசில் என்ற படத்தில் நடித்தார்.

-விளம்பரம்-

இந்த படங்களில் இவருக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் தனது ரேடியோ ஜாக்கி வேலைக்கு சென்று விட்டார். பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 600028 என்ற படத்தின் மூலம் தான் சிவா மக்கள் மத்தியில் பிரபலமானர். இதனை தொடர்ந்து சரோஜா என்ற படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றுத் தந்தது. இதனை தொடர்ந்து சிவா அவர்கள் தமிழ்ப்படம் என்ற படத்தில் நடித்தார். இந்த படம் அனைத்து படங்களையும் கிண்டல் செய்யும் வகையில் வெளியாகியிருந்தது. இதனை தொடர்ந்து இவர் சுந்தர் சி இயக்கத்தில் விமலுடன் இணைந்து கலகலப்பு என்ற படத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

இந்த படமும் வசூல் ரீதியில் நல்ல வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து தில்லுமுல்லு 2, சொன்னா புரியாது, யா யா, வணக்கம் சென்னை, சென்னை 600028 –2 போன்ற பல படங்களில் நடித்து உள்ளார். தற்போது இரண்டு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சிவா அவர்கள் ஆளவந்தான் திரைப்படத்தில் நடித்த போது எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 2001 ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் ஆளவந்தான்.

இந்த படத்தில் கமலஹாசன், மனிஷா கொய்ராலா, ரவீணா டாண்டன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் கமலஹாசன் அவர்கள் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இந்த படத்தில் ஒரு சிறு காட்சியில் மட்டும் சிவா நடித்திருந்தார். தற்போது அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் மிர்ச்சி சிவாவா? ஆளவந்தான் படத்தில் நடித்துள்ளாரா! என்று வியப்புடன் கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement