இளையதளபதி விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம் தன்னுடைய கதை என்று உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் என்பவர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ‘செங்கோல்’ என்ற தன்னுடைய கதையை முருகதாஸ் திருடிவிட்டார் என்று குற்றம் சாட்டி இருந்தார்.

விஸ்வாசம் செகண்ட் லுக்:

Advertisement

இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று(அக்டோபர் 30)நடைபெற்ற நிலையில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸும், “சர்கார்” கதை வருணுடையது தான் என்று ஒப்புக்கொண்டார். ஆனால், கதை கரு மட்டும் தான் அவருடையது என்றும் அதனால் அவரை கௌரவிக்கும் வகையில் வருணின் பெயரை நன்றியுரையில் சேர்ப்பதாக கூறியிருந்தார்.

Advertisement

ஆனால், அதன் பின்னர் சர்கார் படத்தின் கதை திருட்டு விவகாரத்தை பற்றி வீடியோ மூலம் விளக்கமளித்த முருகதாஸ். செங்கோல் என்ற பெயரில் சர்கார் போன்றே உள்ள கதை கருவை மட்டும் தான் வருண் பதிவு செய்திருந்தார். அதனை கௌரவிக்கும் வகையில் தான் அவருடைய பெயரை டைட்டில் கார்டில் போட சம்மதித்தேன். மற்றபடி இது முழுக்கு ழுக்க கதை திரைக்கதை வசனம் அணைத்தும் முருகதாஸ் என்று கூறியிருந்தார்.

Advertisement

அத்தோடு சன் பிக்சர்ஸ் நிறுவனமும் அவசர அவசரமாக ஒரு போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டனர். அதில் கதை திரைக்கதை வசனம் அனைத்தும் ஏ ஆர் முருகதாஸ் என்று குறிப்பிட்டிருந்தனர். ஆனால், அந்த போஸ்டரில் இரு புறமும் இருந்த நபர்களும் ஒன்றாக இருந்தனர். சமீபத்தில் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியான போதும் இதே தவறு அதில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement